Posts Tagged ‘Story’

 

எனக்கு அவ்வளவாகக் கதை எழுதிப் பரிட்சயம் கிடையாது . இருந்தாலும் கதை போல்  எழுதுவதற்கு அவ்வளவு பரிட்சயம் தேவையும் கிடையாது. ”சிறுகதை எழுதுவது எப்படி ? ” என்று இணையத்தில் தேடினால் பக்கம் பக்கமாக வருகிறது. உள்ளே சுண்டி இழுக்கும் ஒரு துவக்கம் .. பின் இயல்பான கதை ஓட்டம் .. அந்தக் கந்தாயம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. அப்புறம் ஒரு திடுக்கிடும் திருப்பத்துடன் கூடிய முடிவு வேண்டுமாம். அங்கு தான் உண்மையான கதையே தொடங்க  வேண்டுமாம். அப்புறம் எப்படி அது முடிவு ஆகும் என்று தெரியவில்லை. இவை எவையும்  இல்லையென்றாலும் , நீங்கள் இதெல்லாம் ஒரு கதையா என்று சட்டைக் காலரைப் பிடித்தாலும் கூட எனக்குக் கவலையில்லை. ஏனெனில் இந்தக் கதை எழுதப்படும் நோக்கமே வேறு. இந்தக் கதையில் தான் என் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கிறது.

இப்ப உன் பிரச்சனை தான் என்ன என்கிறீர்களா..?  எல்லாவற்றுக்கும் இணையத்தில் தேடும் பழக்கம் தான் என் பிரச்சனையே. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் கடினம் தான். உங்களுக்கு அவ்வளவு அவசரமென்றால்  இப்போதைக்கு இதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பிரியங்கா நாளைக்கே விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். இந்தப் பிரச்சனையில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் எங்களுக்குத் இன்னும் திருமணமே ஆகவில்லை.  

Read the rest of this entry »

Tags: , , ,

 

இன்னொரு காதல் கதை # 1

இன்னொரு காதல் கதை # 2

 

ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டாள் , ஹ்ம்ம் .. உங்களைப் போலத் தான் நானும் நினைத்தேன். உங்களுக்கு ஹரிணியைப் பற்றித் தெரியாது. அவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் . மூன்று மணி நேரம் அவளின் கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அவள் அப்பா அம்மா யார் சொல்லியும் கூட வெளியே வரவில்லை.  ஒரு வார்த்தை  கூட அதன் பின் பேசவும் இல்லை.

உங்க சந்தோசம் தான் எங்க சந்தோசம் .. அதுக்காகத் தான் நாங்க உங்க காதலுக்கு ஒத்துகிட்டோம் . பிரச்சனைய மொதல்ல சரி பண்ணிகோங்க .. எப்போ வேணும்னாலும் கல்யாணத்த வச்சிக்கலாம் .. “  இருவரின் பெற்றோர்களும் சொல்லி வைத்தார் போல். 

உண்மையில் நான் தான் டீச்சரின் பிள்ளை போல். எல்லோரிடமும் போய் முறையிட்டுக் கொண்டிருந்தேன். நியாயமாகப் பார்த்தால் , இந்நேரம் அடுத்த மாதத்தின் , ஒரு அழகான தேதியில் எங்களின் திருமணத் தேதி குறிக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தத் தேதி எப்படியும் அடுத்த மாதத்தில் வரத்தான் போகிறது . ஆனால் எனக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை.

ஆரம்பத்தில் அவளிடம் பேச முயற்சித்தேன் . ஒரு நாள் அவள் தோழி என்னிடம் வந்தாள் .

“சொல்லு  அனிதா ..  “

“ஒண்ணு சொல்லணும் கார்த்திக்  .. கோபப்படமாடியே  .. “

” நீ  சொல்ல வரத சொல்றியா மொதல்ல  ? ” எரிச்சல் . எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்.

“பாரு  .. நீ இப்போவே கோபப்படற .. ஹரிணி சொல்லி தான் வந்தேன் .. நான் போறேன் ..  “

“ஹே .. ப்ளீஸ் போகாத .. நில்லு .. நான் கோபப்படல ” அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன் .

“கைய விடு கார்த்திக் ..  எல்லாரும் பாக்கறாங்க .. “

“ஸாரி .. ஸாரி   ..  ப்ளீஸ் சொல்லு “


“நீ அவகிட்ட பேச முயற்சி பண்ணாத இனிமே .. அவ பேச மாட்டா .. “

“நீ யாரு இத சொல்ல .. “

“எனக்கெந்த ஆசையும் இல்ல .. இத சொல்லணும் ன்னு .. அவ சொல்ல சொன்னா ..  மீட்டிங் ரூம் முன்னால நிக்கறது .. அவள ஃபாலோ  பண்றது .. இனிமே எதுவும் வேணான்னு சொல்ல சொன்னா  “

“இல்ல .. இருக்காது .. என் ஹரிணி அப்படி சொல்லியிருக்க மாட்டா .. “

“கார்த்திக் .. புரிஞ்சுகோ .. இட்ஸ் ஓவர் ..  அதையும் நீ மீறி .. “

என் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

“… நீ அவளை ஆபீஸ் ல தொல்ல பண்றன்னு .. எச். ஆர் கிட்ட கம்ப்ளைன்ட் .. “

“போதும் அனிதா .. போதும் .. ” கை கூப்பினேன். “உன் ஃபிரண்ட் கிட்ட போய் சொல்லு .. என்னால இனிமே எந்த தொல்லையும் இருக்காது அவளுக்கு .. ” அனிதா போய்விட்டாள் . ஹரிணியும் போய்விட்டாள். எல்லாமும் போய்விட்டது. Read the rest of this entry »

Tags: ,

 

இன்னொரு காதல் கதை - 1

சரியாக அன்றிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களால் திருமணம் நிச்சயமானது. இருவரின் குடும்பத்திலும் எங்கள் இருவரையும் பிடித்துப் போயிருந்தது. நியாமாகப் பார்த்தால் காதலர்கள் எல்லாரும் சார்லஸ் பாபேஜுக்கு தனியாக கோவில் கட்டி இரண்டாவது காதல் தினமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். என்ன திருமணம் மட்டும் ஆறு மாதங்கள் கழித்து . அதிலும் ஒரு சௌகரியம் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் .. கூடுதல் உரிமம். ஆறு மாதத்திற்கு ஆசை தீரக் காதலிக்கலாம்.ஓட்டுவது எப்படி. நவம்பர் மாதத்திற்கு நன்றி.

எனக்கு எல்லாமே புதிதாகத் தான் இருக்கிறது . ஹரிணியைப் போல ஒரு பெண் கற்பனையில் இருந்திருந்தாலும், நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதுவும் காதலித்து அது திருமணத்தில் வந்து முடியும் என்று .. ம்ம்ஹம்ம்.. எல்லாமே புதிதுதான் ..

சின்னப் பெண் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் திருமண நிச்சயத்திற்குப் பிறகு எவ்வளவு மாறிவிட்டாள். திருமணத்திற்குப் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்ற  திட்டமிடல்கள் . ஒரு சின்ன பிளாட் ..கொஞ்சமே நீல நிறத்தில்… இப்பொழுதைக்கு ஒரு சி.பி.செட் எக்ஸ்ட்ரீம்… இரண்டு மூன்று வருடங்களில் ஸ்விப்ட் ..   . எங்கள் படுக்கை அறையில் கொஞ்சம் வெளிர் ஊதா. படிக்கும் அறை அவளின் புத்தகங்களை வைக்க .. குட்டி ஜிம் எனக்கு ..  ஒரு ஆண் .. ஒரு பெண் ..அவர்கள் படிக்கும் பள்ளி ..  எல்லாவற்றிகும் ஒரு சிறு புன்னகையுடன் சரி என்று சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது.

இத்தனை வருடங்களாகப் பேசாத பேச்செல்லாம் மொத்தமாகப் பேசித் தீர்ப்பது போல பேசியிருக்கிறோம். அவளின் கனவுகள் மொத்தமும் அழகானது . சில அபூர்வமானவைகள் கூட. பேசிக்கொண்டே இருக்கும் போதே அவள் முகம் பார்த்துக் கொண்டே சட்டென்று வார்த்தைகள் இல்லாது போவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கன்னங்கள் இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு , சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்று பாடத் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

முதல் கட்டமாக சி.பி.செட் வாங்கியாகிவிட்டது. வேளச்சேரியில் பில்டருக்கும் சொல்லியாகிவிட்டது. ஈ.எம்.ஐ இல்லாமல் வாழ்கையை

பைக் வாங்கிவிட்டதால் இப்பொழுதெல்லாம் ‘கேப்’ கிடையாது. நேராக அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு, பின் என் வீட்டிற்கு. இன்னும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அது ஒரு வெள்ளிக் கிழமை. அவள் மயில் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். நானும் ஊதா நிறம் . இப்பொழுதெல்லாம் என்றைக்கு என்ன நிற உடை அணியவேண்டும் என்பதைக் கூட அவள் தான் தீர்மானிக்கிறாள். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிய வேண்டுமாம்.மாயாஜால் போய்விட்டு வருவதற்கு இரவு நேரமாகிவிட்டது . சோழிங்கநல்லூர் தாண்டுவதற்குள்ளாகவே மழை மொத்தமாக நனைத்துவிட்டது.

அவளது அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று . Read the rest of this entry »

Tags: ,

 

இதெல்லாம் ஒரு வேலையா என்று கூட பல முறைகள் நினைத்ததுண்டு. டெஸ்டிங் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை சரி தான் .. டெவெலப்பர்ஸ் என்ன நமக்கு மாமனா மச்சானா.. நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகவேண்டியது தான் .  என்ன இரவு கொஞ்ச நேரம் அதிகமாக விழித்திருக்க வேண்டும்.  இல்லை இதை இப்படியும் சொல்லலாம். அவர்களின் பகலில் விழித்திருக்க வேண்டும்.  அதிகமுறை யோசித்ததுண்டு . இவ்வளவு பயந்தவர்கள் எப்படி இத்தனை நாடுகளைத் தங்களின் கீழ் வைத்து வேலை வாங்குகிறார்கள் என்று.

 

இன்றைக்கு இது போதும் . வேலை முடிந்தாயிற்று . லிஃப்டில் இறங்கும் போதே வேலைகள் பற்றிய எண்ணங்களை இறக்கிவைத்திட வேண்டும் என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒப்பந்தம். ஒரு மணி கேபிற்கு என்னைத் தவிர யாரும் ஒரு மணிக்கே வரப்போவதில்லை . எல்லாரும் வந்து , செக்யூரிட்டி ரூட் போட்டுக் கொடுத்து வண்டி கிளம்ப எப்படியும் ஒன்னரை ஆகிவிடும்.

 

டைடலின் பின்புறத்திலிருந்து ஒரு அழகான வியு பாய்ண்ட் இருக்கிறது . இடது புறத்தில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் . அதன் உச்சிக்கும் எல்நெட் கட்டிடத்திற்கும் இடையில் அவ்வப்பொழுது அரிதாக நிலா எட்டிப் பார்க்கும். இன்றைக்கும் வானம் மொத்தமும் மேகமூட்டம். நட்சத்திரங்கள் பார்க்கும் வேலை கூட இல்லை. எனது வண்டி எண்ணை மட்டும் கேட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து ஐபாடை மாட்டிக் கொண்டேன்.  When you have everything .. What could you possibly desire ?The one you loved the most …  ஏகான் மொத்த சோகத்தையும் கண்களில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்.  பாடல் கேட்கும் எண்ணமும் இல்லாமலிருந்தது . ஏனோ சில சமயங்களில் எதுவுமே பிடிக்காமல் எரிச்சலாக இருக்கும். எல்லாரிடமிருந்தும் , எல்லாவற்றிலிருந்தும் தனிமைப்பட்டுவிடத் தோன்றும். ஒருவேளை எனக்கு அந்தப் பாடல் வரிகள் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம் .வெறுமனே கண்ணாடியை வெறித்துப் பார்த்தே அடுத்த சில நிமிடங்கள் கழிந்தன.

Read the rest of this entry »

Tags: ,

 

 

“பூமார்க் பீடி ஒரு கட்டு “

 

“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “

 

“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “

 

“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்தேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “

 

” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”

 

“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..?”

 

Read the rest of this entry »

Tags: , ,

6
Jan

பொய்

   Posted by: Rejovasan   in கதை நேரம்

“எனிதிங் எல்ஸ் விவேக் ??”

தினமும் இந்திய நேரப்படி மாலை 5.30 ற்கு நடக்கும் ஸ்டேடஸ் காலில் முடியும் தருவாயில் தோரணையாகக் கேட்டது மணிகண்டன் . ஆன் சைட் கோ-ஆர்டினேட்டர் .லண்டனில் இருந்துகொண்டு , இங்கே சென்னையில் அவருக்கு கீழே இருப்பவர்களைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார் . வயது சுமார் 30.மூக்குக் கண்ணாடியையும் தொப்பையையும் பார்க்கையில் அதிகமாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் திருமணமாகி மனைவியை ஊரில் விட்டு விட்டு தனியே ஹனி மூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் . இந்த கூடுதல் தகவல் அவரது கடமை உணர்வையும் , போங்கடா நீங்களும் உங்கள் வேலையையும் என விட்டு விட்டு வர முடியாத கையலாகாதனத்தையும் சொல்வதற்காக நிச்சயம் அல்ல .

“ஒன்னும் பிரச்சனை இல்ல மணி . அடுத்த வாரத்துக்குள்ள டெஸ்டிங் முடிச்சு யு.ஏ.டி அனுப்பிடலாம் .. அப்பறம் மணி இந்த ஃபிரைடே லீவ் வீணும்

குரலில் மட்டும் மரியாதையைக் குழைத்து , தூரத்திலிருப்பவனுக்கு முகமா தெரியப் போகிறது என்ற மகா தைரியத்தில் முகத்துள் முறுக்கையும் காட்டி , விடுமுறைக்கு கெஞ்சிக் கொண்டிருப்பது விவேக் . வயது 23 . முன்னந்தலையில் இன்னும் கொஞ்ச நாளில் மணியை முந்தி விடுவேன் என்பவன் .இந்த மென்பொருள் துறையில் பரிணாம வளர்ச்சியே இப்படித்தான் . முன்னந் தலையிலும் முட்டிக் கொண்டு வரும் தொப்பையிலும் வெகு சீக்கிரம் வந்து முடிந்து விடும் . குழந்தை பிறந்த உடனேயே அப்பா என்று சொல்லி சொல்லி வளர்த்து விட்டு விட வேண்டும் . இல்லை வாயைத் திறந்த உடனேயே அழகாக அங்கிள் என்று சொல்லி விடும் .

Read the rest of this entry »

Tags: ,

5
Jan

காதல் கதை

   Posted by: Rejovasan   in கதை நேரம்

வெயிலுக்கு முன்பே பனி பெய்திருந்த அந்நாளில் அவளைச் சந்தித்தேன் ..

தெருவினைத் தெளித்து வரைந்து கொண்டிருந்தாள் . கொஞ்ச நேரம் நின்று நனைத்து கொண்டிருந்தேன் .

பனியின் படலம் திரையிட்டு இருந்தும் , அவள் மட்டும் தெரிந்தாள் ஓவியம் போலவே .

மின்னல் அவள் பெயரா ? கண்கள் பார்த்தேன் .ஆமாம் என்றன .

குளிரில் நடுங்கும் உதடுகள் பார்த்தேன் .அதிலிருந்த வரிகளில் உதிர்ந்து கொண்டிருந்தன எனக்கான கவிதைகள் .

அணிந்திருந்தது அவளுக்கான பிரத்யேக ஆடையா இல்லை ஆடைக்கான பிரத்யேக அவளா ??

நெற்றி முன் விழுந்த முடி , தேடி வந்து கை தள்ள ; மீண்டும் என்றேன் .

ஒருமுறை பார்த்தாள் . திரும்பியே சிரித்தாள் .நொடியினில் மறைந்தாள்

தனியே நின்றேன் .

Read the rest of this entry »

Tags: ,

 

 

                       இன்னும்  நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள் எனக்கு . தூக்கம்  கூட கலையாமல் , அழ அழ என்னையும் என் தம்பியையும்  லாரியில் உள்ள பொருட்களோடு ஏற்றி ,ஐந்து வருடங்களாக அழகான என் பால்யத்தை கழித்த ஊரை விட்டு விட்டு , இன்னமும்

என் நெற்றியில் நிலைத்து நின்று விட்ட தழும்புகள் தந்த திண்ணையை விட்டு விட்டு , வீட்டு மாற்றி புது ஊருக்கு எங்களை  அப்பா அழைத்துச் சென்ற நாள் . வாடகை வீட்டில் குடியிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த வலியும் , வேதனை உணர்வும் .வரும் வழி முழுதும் அழுது அடித்த வாடைக்காற்றில் அது காய்ந்தும் போய் வெறும் கேவலாக

நின்று விட்டிருந்தது .அன்று தான் நிகழ்ந்தது அவனுடனான என் .. எங்கள் முதல் சந்திப்பு .

 

அவனாகவே வந்து பொருட்களை இறக்கி வைக்க உதவி செய்தான் . எந்தப் பொருகளை எங்கே வைக்க வேண்டும் என்று  உத்தரவிட்டான் . ரைட் போலாம் போ போலாம் போ என லாரியை ரிவர்சில் போக உதவி செய்தான் . அப்பா பணம் தந்ததற்கு ,

இப்பொழுது வேண்டாம் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்  என்று சொல்லிவிட்டு , என் தம்பியின் கன்னத்தில் கிள்ளி  முத்தமிட்டுச் சென்று விட்டான் .

 

அப்பொழுது எனக்கு பத்து வயது என்றாலும் , யாராவது வீட்டு முகவரி எழுதச் சொன்னால் , தெரு பெயரை எழுதி விட்டு ,வீட்டு  எண்ணை யோசித்து திரு திருவென முழிக்கும் அளவிற்கு தான் நியாபக சக்தி எனக்கு . என் புதிய பள்ளியின் நேர்முகத் தேர்வில்  கூட அப்பாவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னதற்கு யோசித்து யோசித்து கடைசியாக ரெங்காவுக்கு பதில் ரிங்கா  என்று தான் எழுதியிருந்தேன் . ஆனாலும் ” பயல் இன்னமும் ரைம்சை  மறக்கலை பாரேன்” என்று வெரி குட் சொல்லி சேர்த்துக் கொண்டார்கள் . இருந்தும் இன்னமும் அவன் முகம் மட்டும் தெளிவாக மனதில் இருக்கிறது  அழியாமல் ,  ஒரு பிடித்த கனவைப் போல .

Read the rest of this entry »

Tags: ,

 

 

அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …

 

அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .

 

நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .

நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .

 

நான் தான் அபூர்வா இப்பொழுது .

 

இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக்  குனிந்து கொண்டு  இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம்  உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை

நிறுத்த வேண்டும் .

 

“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்

அவளையும் கேட்பது .

 

நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .

Read the rest of this entry »

Tags: ,

 

அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .

 

“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”

 

கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”

 

“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”

Read the rest of this entry »

Tags: ,