Posted by: Rejovasan in ஆதலினால் கவிதை
தவறுதலாகக் கொட்டிவிட்ட
தீக்குச்சிகளை
மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்
பசைவாசம் ஆறாத குச்சிகளில்
ஆங்காங்கே தோன்றி
இடறிவிடுகின்றன
பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன
பாலகனின் விரல் ரேகைகள் .
Tags: poem, SSA