Posts Tagged ‘short story’

 

எத்தனை அலை
வந்து சொல்லிச்சென்ற
பின்னும்,
மிச்சமிருக்கின்றன
கடலைப்பற்றிய கதைகள்,
உன்னைப் பற்றிய
என் கவிதைகளும்…

 

               - B’Morgan

 

                                         சொல்லப்படாத காதல் கதைகள் என்று எதுவும் கிடையாது .. இருந்தும் ஒவ்வொரு காதல் கதையும் புதியதே ..

 

 

 

விரைவில்   …

————————————————

Tags: , ,

29
Sep

பரணி

   Posted by: Rejovasan   in கதை நேரம்

யுத்தம் நிகழும் கணங்கள் நாவறுக்கப்பட்டவைகள்

அதன் பிறகு வருகின்ற நாட்களே

பைத்தியம் பிடித்து உன்மத்தமாய்

இறந்துபோகும் வரை பிதற்றியபடியிருக்கின்றன

- யாரோ

இன்னமும் மூன்றே பேர்கள் .. இருவர் என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆடைகளைப் பற்றியிருக்கிறவன் தான் முக்கியம் இப்பொழுது . அவளில் மேல் விழுந்திருக்கின்றன அத்தனை நகக்கீறல்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் .

என் கையில் இருந்த தடியால் அவன் பின் மண்டையில் பலமாக அடித்தேன் . இன்னமும் கொஞ்சம் ரத்தக்கறையானது . மீதமிருந்த இருவரும் என்னைப் பார்த்து ஒடத்துவங்கினார்கள் .

Read the rest of this entry »

Tags: , ,

 

எங்கள் முன் கோலாவை வைத்து விட்டு ,அந்த இயந்திரப் பெண் அச்சு அசலாக , உயிர்ப்   பெண்ணைப் போலவே கண்ணடித்து , வேறு ஏதேனும் வேண்டுமா கனவான்களே என்று கேட்டு , புன்னகையுடன் எங்கள் பதிலுக்காகக் காத்திருந்தது.

 

லட்டு மாதிரி இருக்க .. உன்ன தான் கேக்கணும் .. என்ன மாடல்டா குட்டி நீ !” ஹரி சில்மிஷமாகக் கேட்டான்.

 

எஃப் எஸ் த்ரீ சார் .. அப்புறம் குட்டி என்றெல்லாம் கூப்பிடக் கூடாது. இது அத்து மீறல் .. இன்னும் இரண்டு முறை தான் மீறலாம் என் பெயர் ஷிவானி … ” அதே புன்னகையுடன் நடந்து சென்றாள்.

 

விட்டா, ஈவ் டீசிங் கேஸ் போடும் போல என் கைகளில் தட்டினான். நானும் சிரித்தேன். நாங்கள் இருவரும் சிரித்து முடிக்கும் முன் எங்களைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன்.

 

நான் கிருஷ் ,, இந்த குறுந்தாடி ஹரி .. உங்கள் எல்லாரையும் போல நாங்களும் ஒரு மென்பொருள் துறையில் , கட்டமைப்பாளர்களாக இருக்கிறோம். இந்த வாழ்கை , வசதிகள் எல்லாமே பிடித்திருக்கிறது.இந்த கோலா கூட நன்றாகத் தான் இருக்கிறது. இடையை வெட்டி வெட்டி செல்லும் ஷிவானி கூட ஆனால் ஒன்றே ஒன்று தான் குறை. இந்த வாழ்கை நிஜம் அல்ல . நிழல் போல .. பாலைவனத்துக் கானல் போல .. வெர்ச்சுவல் .

 

என்னடா கிருஷ் .. ஏன் டல்லா இருக்க நீட் சம் மோர் ட்ரிங்க் ?? .. இல்ல   மறுபடியும் சோஃபியா வா ..? ”

 

எஸ் டா .. என்னால அவளை மறக்க முடியலை .. ஸ்டில் லவ் ஹெர் … Read the rest of this entry »

Tags: ,

1:

 

எனக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத் தெரியாது . ஆனால் இந்தக் கதையின் அவனைப் பற்றி எனக்கு ஓரளவேனும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் . குறைந்த பட்சம் அவனது ஒரு இரவின் பாதியாவது .

 

இரவு . ஆமாம் .. இரவே தான் . என்னை நானே முதலீடு செய்து கொள்ளும் நேரம் அதுதான் .  இதைச் சொல்வதற்காக எனக்கு எந்த வருத்தமோ பச்சாதாபமோ கிடையாது . நான் அப்படித்தான். அதில் எனக்கு ஒரு கர்வம் கூட உண்டு. உங்களுக்காக பாரம் சுமந்து ஓவ்வொரு நாள் காலையும் உயித்தெழ என்னால் மட்டுமே முடியும். நிற்க . இந்தக் கதை என்னைப் பற்றி அல்லவே. கொஞ்சம் கவிதைகள் படித்தாலே நான் யார் என்பதைத் தேடச் சொல்லி , தேடித் தேடி இறுதியில் நான் என்பதே எஞ்சி நிற்கிறது. அவனுக்கு வருகிறேன் .

 

என் பெயர் .. ஓ .. கதையின் ஆரம்பம் என்றால் பெயர் சொல்ல வேண்டுமல்லவா. இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாமல் அநேகம் பேர் விரலைக் கூடத் தொடுவதில்லை. நான் சந்தித்திருக்கும் அநேகம் பேரிடம் முதலில் சந்திக்கும் கேள்வி என் பெயர் பற்றியதாகத் தான் இருக்கிறது . அந்த நமைச்சல் உங்களுக்கும் இருப்பின் தெரிந்து கொள்ளுங்கள் அந்த இரவில் என் பெயர் வைஷ்ணவி.

 

இந்தப் பெயரும் அவன் வைத்தது தான்.

 

Read the rest of this entry »

Tags: ,

 

 

 

 

 

 

 

“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.

 

“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”

 

இது எங்கள் மறைவிடம்.  எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.

 

சுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.

 

 

என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.

 

 

அவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.

 

ஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

Read the rest of this entry »

Tags: , ,

 

 

       அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள்

       இழப்பை நான் உணரும் போது

       துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் 

                                              

       - பாப்லோ நெருடா

-                                                                                                                                                       

சந்தியா கொஞ்ச கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறாள் . என் உயிர் நீ .. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என போராடுவதற்கு எதுவுமில்லை . எல்லாம் முடிந்து விட்டது என்ற நிதர்சனம் மனம் பூராவும் பரவிக் கிடக்கிறது . துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலைப் பார்க்கும் போது உயிர் போவதே பரவா இல்லை என எல்லாருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் .

 

மணி மூன்றடித்தது . இன்னமும் அவள் நினைவு திரும்பவில்லை .போவதற்கு முன் ஒரு முறையாவது கண்ணைத் திறந்து பார்க்க மாட்டாளா என தான் அவள் அருகிலேயே உட்கார்ந்திருக்கிறேன்.

 

நேற்று தான் இவளைப் பெண் பார்க்கச் சென்றது போல் இருக்கிறது .

 

பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது . யார் தான் வேண்டாம் என்பார்கள் இவளைப் போன்ற ஒருத்தியை . மிகவும் அமைதியாகவே என்னருகில் நின்றிருந்தாள் . கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் பால்கனியில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்திலிருந்த கோவிலொன்றில்  மணியடித்தது .

 

“என்னங்க எதுவுமே பேச மாட்டீங்களா நீங்க ??”

 

அவள் எவ்வளவு பேசுவாள் என்பது அப்பொழுது தெரியாமல் நான் கேட்டது . பைத்தியக்காரி . விட்டால் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டேயிருப்பாள் . விரும்பிய இசை கூட சலித்துப்போகும் ஒரு காலத்திற்கு பிறகு . கொஞ்சம் கூட பொருள் , நோக்கம் எதுவுமில்லாமல் அவள் பேசுவது இன்றும் கூட சலித்ததே இல்லை .

 

 ” ஹேய்  பைத்தியக்காரி , ஒரே ஒரு முறை என்னைப் பார்த்து பேசேன் இப்பொழுது “

 

எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் மெதுவாக . நிச்சயம் அவளுக்கு இது கேட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்திறந்து என்னைப் பார்க்கத் தான் போகிறாள்.அவள் முகத்தைப் பார்த்தேன் . கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருக்கிறாள் . அன்றும் கூட இதே போல் தான் இருந்தாள்.

 

“ஏதாவது பேசலாமே .. அதுக்கு தான பெரியவங்க தனியா அனுப்பிருக்காங்க . “

 

மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.மீண்டும் கொஞ்ச நேரம் மௌனம் .

 

“சரிங்க , நாம நெறைய பேசிட்டோம்ன்னு நெனைக்கறேன் .. அப்போ கீழ போகலாமா ” என இரண்டடி எடுத்து வைத்தேன் .

 

ம்ம்ஹீம் .. என வேகமாக மறுத்து தலையசைத்தாள். அந்த வெட்கம் கலந்த முகம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது . நின்று அவளையே பார்த்தேன் .

Read the rest of this entry »

Tags: , ,

 

 

லீவுக்கு மாமனார் வீட்டுக்கு போனா என்னங்க பண்ணனும் .கொஞ்சம் அதிகாரம் பண்ணலாம் . டிவி ரிமோட்ட கைல எடுத்து வச்சுக்கலாம் . கிரிக்கெட் இல்லன்னா புரியாட்டியும் பரவா  இல்லன்னும் புட் பால் ரக்பின்னு கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பாக்கலாம் . ஒரு சானல்ல ,சீன குட்டிங்க கொஞ்சூண்டு துணி போட்டு சகதில கட்டிப் பிடிச்சு சண்ட போடுதுங்க .. அதையாவது ஸ்வாப்பிங்-ல ஜெட்டிக்ஸ் -அ வச்சிக்கிட்டு பாக்கலாம் . நல்லா தூங்கலாம் . சாப்டலாம் . சாயங்காலம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ண துணிய மாட்டிகிட்டு வொய்ஃபோட கோவிலு சினிமான்னு போயிட்டு வரலாம் . யாராவது கடவுளைக் காட்டறேன்னு சொல்லுவாங்களா . நான் சொல்லிருக்கனே .

 

உங்களுக்கு புரியறா மாதிரி சொல்லணும்னா நான் தெய்வானைய ஏன் கல்யாணம் பண்ணினேங்கறதுல   இருந்து ஆரம்பிக்கணும் .எதுக்குங்க நான் திருச்சில பொண்ணு எடுக்கணும் . நான் திருச்சி பெல்-ல தான் வேலை செய்யறேன் .   அதே ஊருன்னா ஞாயித்துக் கிழமையான போய் வர சௌரியமா  இருக்குமேன்னு தான் .

 

உங்களுக்கு திருவெறும்பீஸ்வரர் மலைக்கோயில் தெரியுமா ??ம்ம் .. ஹ்ம்ம் .. உச்சிபிள்ளையார் கோயில் இல்லைங்க .. இது தஞ்சாவூர் போற ரோட்ல இருக்கு .. பக்கத்துல கூட ஒரு கவர்மென்ட் காலேஜ் இருக்கு .. பொண்ணுங்க எல்லாம் கிளாஸ்க்கு டவுசர் பனியன் போட்டு போவாங்களாம் .. வள்ளி சொல்லுவா . வள்ளி யாருன்னு அப்பறம் சொல்றேன் .

 

மலைக்கோவில் இருக்கா .. அது தாண்டி கொஞ்ச தூரம் போனீங்கன்னா காட்டூருக்கு முன்னாடி தான் கைலாஷ் நகர் இருக்கு . பஸ்ல இருந்து எறங்குனதும் அங்க மளிகை கடை தெரியுது பாருங்க ..அவ்ளோ தாங்க ,அத ஒட்டினா மாதிரி போற சந்துல கடைசிக்கு மொத வீடு .இந்திரன் வாத்தியார் வீடுன்னா எல்லாருக்கும் தெரியும் . மாடில , சாயங்காலம் ஆனா இங்கிலீஷ் டியுசன் எல்லாம் எடுப்பாரு .அது தாங்க நம்ம மாமனார் வீடு .

 

இப்போ வள்ளி . முழு பேரு ஸ்ரீ வள்ளி .நம்ம வொய்ஃபோட தங்கச்சி .. எனக்கு அப்டின்னா மச்சினிச்சி .. இந்த பேர்ல அப்டி என்ன தான் கிக் இருக்கோ போங்க சார் . சொல்லும் போதே ஓரத்துல கள்ளச் சிரிப்பு வருது .மச்சினிச்சி . ஸ்கூல்ல பதினொன்னு படிக்கறா . நல்ல செகப்பா வின்னுன்னு இருப்பா . ஏ கியூப் ப்ளஸ் பி கியூப் னா சிவிக்ஸ் ல வருதான்னு கேப்பா . அல்ஜீப்ரா சொல்லிக் குடுக்கறேன்னு கைல தடவலாம் . கன்னத்தைக் கிள்ளலாம் .எதுவும் சொல்ல மாட்டா. அவங்கப்பாவுக்கும் மாத்ஸ் வாத்தியாருக்கும் ஆகாதது நமக்கு நல்லதா போச்சு . ஸ்கூல் முடிச்சிட்டு அந்த கவர்மென்ட் காலேஜ் தான் போகணும்னு ஆசையாம்.  அவளை பனியன்ல நெனச்சா இப்போவே சப்புக் கொட்டுது .

 

சண்டே மட்டன் ,சைனா காரிங்க குஸ்தி , வள்ளிக்கு மாத்தமாடிஃக்ஸ் , வொய்ஃபோட சோனா -மீனா தியேட்டர்ல சினிமான்னு வாழ்க்கை நல்லா தான் சார் போயிட்டு இருந்தது . எல்லாம் அந்த பாழா போன கடவுளைப் பாக்கற வரைக்கும் .

Read the rest of this entry »

Tags: ,

 

 

 

நன்றி : உயிரோசை.உயிர்மை.காம்

              சற்றுமுன்பு துரத்தப் பட்டுக் கொண்டிருந்ததற்கான எந்தச் சலனமும் இன்றி இரயில் நிலையத்திலிருந்து சாலையைக் கடக்கப் போடப்பட்டிருந்த ஃப்ளை ஓவரின் மேல் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறேன் . திரும்பிப் பார்த்தேன் . அவளைக் காணவில்லை . நிச்சயமாக அவள் என்னை விடப் போவதில்லை என்று தெரிந்தும் தற்காலிகமாகத் தப்பித்த நிம்மதி.பாலத்தின் மேலேயே நின்று கொண்டேன் .எந்த அரவமும் இல்லாதது நிம்மதியாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது .இந்தத் தனிமை தானே இத்தனை வருடங்களாய் என்னுடன் இருந்து வருகிறது . அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் .எந்த நேரத்திலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் அவள் வரக்கூடும் .

Read the rest of this entry »

Tags: , ,