Posts Tagged ‘Love story’


And think not you can Direct the course of love, For love, If it finds you worthy, Directs your course.
                                                                                               -  Kahlil Gibran

 

அந்த இரவு என்னால் நிச்சயமாக மறக்க முடியாதது.

கண்கள் மூடிக்கொண்டு படிக்க முடிகிற ஒரே புத்தகம் கனவு தானே. எத்தனையோ காட்சிகள் என்னறையின் இருளின் ஊடாக கண்களில் விரிந்து கொண்டிருந்தன. எல்லா காட்சிகளிலும் நானும் வெண்ணிலாவும். இடங்களும் பொருட்களும் ஏவல்களும் மாறினாலும் எல்லாவற்றிலும் நானும் வெண்ணிலாவும் மட்டும்.

எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்தோம். வானம் முழுதும் நிலா அடைத்திருந்தது. அவளைத் தழுவிய காற்று வேண்டா வெறுப்பாக என்னையும் மோதிச் சென்றது.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் பேசாமயே நிக்க போற? ” அவள் கிளம்புவது போல திரும்பினாள்.

நான் மெளனமாக நின்றிருந்தேன். மெளனமாக மட்டுமே நின்றிருந்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எதையும் பேச முடியவில்லை. வாயைத் திறக்க முயன்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை.

கடைசியில் மிகவும் பிரயாசைப் பட்டு வாயைத் திறந்தேன்.

Read the rest of this entry »

Tags:

  

            “When I saw you I fell in love, and you smiled because you knew. “

 

                                                                                     – William Shakespeare

 

அவள் சிரித்தாள் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முதல் முறை பார்த்த பொழுது சிரிக்கவில்லை.

மிக இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்கை மொத்தமாக மாறிப் போனது அவளைப் பார்த்த அந்த வினாடி. என் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஜூன் 18, மணி மூன்று பதினான்கு .. அவளைச் சந்திப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு,

“பிரபு , ஒரு ரெஸ்யூமே அனுப்பிருக்கேன் .. ஆர்த்தி ரீப்ளேஸ்மென்ட்.. எவாலுவேட் பண்ணி சொல்லு ” மல்லிகா, என் ப்ராஜெக்ட் லீட். இரண்டு வாரங்களில் அவர் டென்வர் செல்வதாக இருந்ததால் அடுத்த லீடாக நான் தேர்வாகியிருந்தேன். ட்ரான்சிஷன்  பீரியடில் இருந்தேன்.

மல்லிகா

“ம்ம .. சொல்லுடா ..”

“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிருங்க …”

“ஏன்டா ? என்ன பிரச்சனை ?”

“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் ..”

“அப்பறம் என்னடா பிரச்சனை ? ”

“என்ன பிரச்சனைனா , கேண்டிடட் பொண்ணு .. ஏற்கனவே டீம் ல பதினாலு பேர்ல எட்டு பொண்ணுங்க … நைட் ஷிப்ட் பிரச்சனை வரும் .. பையனை எடுத்தா பிரச்சனை இல்லேல .. அதுவும் இல்லாம ப்ரெஷர் வேற .. எல்லாத்தையும் சொல்லித் தரணும் மொதல்ல இருந்து ..”

“பொண்ணுங்கறத எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது தம்பி ..  நேர்ல கூப்ட்டு பேசு .. எதாவது காரணம் கண்டுபிடிச்சு சொல்லு …திருப்பி குடுத்திடலாம் … ”

“வேற யாரையாவது பண்ண சொல்ல வேண்டியது தான ..”

“ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது …”

ரெஸ்யூமில் அவளது எண் இருந்தது. அழைத்தேன். காத்திருந்தேன். அத்தனை வருடங்களுக்குப் பிறகான கடைசி இரண்டு நிமிடக் காத்திருப்பு.

“ஹலோ திஸ் இஸ் வெண்ணிலா …”

Read the rest of this entry »

Tags:

1
“Love does not begin and end the way we seem to think it does. Love is a battle, love is a war; love is a growing up. “

                                                                                                            – James Baldwin


         நின்று கொண்டிருந்த ரயிலொன்றின் புகையினூடே அவள் உருவம் ஒரு முறை தோன்றி மறைந்து போனது. சக்கரம் நின்ற பிறகு முழு ஒரு ருபாய் நாணயத்தைப் போடவும். சிகப்பு வெள்ளைச் சக்கரம் சுற்றி நின்றது. ஒரு ரூபாய் நாணயம் ஒரு நொடியில் அவளைப் பார்த்த கணத்தில் நான் தொலைந்தது போலவே தொலைந்து போனது.

ஹேய் நீ கொஞ்சம் சதை போட்டன்னு நெனைக்கறேன்

எங்க ?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அங்கயே  தான்

கெட்ட பையன் நீ .. அங்க எல்லாம் ஏன் பாக்கற?”  கோபம் போன்ற கோபமில்லா பார்வை பார்த்தாள்.

என் தப்பு இதுல என்ன இருக்கு .. நியாயமா பார்த்தா பொடவை கட்டின உன்னை நீயே தான் திட்டிக்கணும்

திட்டறேன் .. திட்டறேன் .. நான் ஒன்னும் வெயிட் போடல ..  அதே அம்பத்தாறு தான்

நாலு கிலோ கூடிருக்க ..”  இறக்கி விட மனமில்லாமல் தூக்கியபடியே நின்றிருந்தேன்.

ச்சீ .. கீழ இறக்கிவிடு .. “

வாக்குவாதத்தின் முடிவில் கிண்டி ரயில் நிலையத்தின் எடை பார்க்கும் இயந்திரத்தின் அருகில் இருந்தோம். என் பையில் இருந்து ஒரு ருபாய் நாணயத்தை எடுத்துப் போட்டாள். எனது மனதைப் போடவே ஒரு முறை துடித்து அச்சிடப்பட்ட அட்டையைத் துப்பியது அது. அட்டையை எடுத்துப் பார்த்தவள் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள்.

இப்போ எதுக்கு மறைக்கற .. ஒழுங்கா காட்டு ..”

ம்ம்ஹீம் .. மாட்டேன்உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லியா .. “

கண்ணா பின்னான்னு காட்டிருச்சோ ..? “

நீ மட்டும் என்ன .. நீயும் தான் வெயிட் போட்ட ..”

அப்படியாஎவ்ளோன்னு சொல்லு பாப்போம் .. ” கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு சொன்னேன்.

மேலும் கீழும் பார்த்தவள்தொண்ணூறுஎன்றாள்.

இது போங்கு.. ஒழுங்கா தூக்கிப் பார்த்து சொல்லு ..”

ஆஹா .. ஆசை தான் .. ஒழுங்கா மெஷின் மேல ஏறி நில்லு “  இது போன்ற பாவனைகளை எல்லாம் எந்த தேவதையிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறாளோ !

என்னைப் போலவே ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டது இயந்திரம். Read the rest of this entry »

Tags:

 

இன்னொரு காதல் கதை # 1

இன்னொரு காதல் கதை # 2

 

ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டாள் , ஹ்ம்ம் .. உங்களைப் போலத் தான் நானும் நினைத்தேன். உங்களுக்கு ஹரிணியைப் பற்றித் தெரியாது. அவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் . மூன்று மணி நேரம் அவளின் கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அவள் அப்பா அம்மா யார் சொல்லியும் கூட வெளியே வரவில்லை.  ஒரு வார்த்தை  கூட அதன் பின் பேசவும் இல்லை.

உங்க சந்தோசம் தான் எங்க சந்தோசம் .. அதுக்காகத் தான் நாங்க உங்க காதலுக்கு ஒத்துகிட்டோம் . பிரச்சனைய மொதல்ல சரி பண்ணிகோங்க .. எப்போ வேணும்னாலும் கல்யாணத்த வச்சிக்கலாம் .. “  இருவரின் பெற்றோர்களும் சொல்லி வைத்தார் போல். 

உண்மையில் நான் தான் டீச்சரின் பிள்ளை போல். எல்லோரிடமும் போய் முறையிட்டுக் கொண்டிருந்தேன். நியாயமாகப் பார்த்தால் , இந்நேரம் அடுத்த மாதத்தின் , ஒரு அழகான தேதியில் எங்களின் திருமணத் தேதி குறிக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தத் தேதி எப்படியும் அடுத்த மாதத்தில் வரத்தான் போகிறது . ஆனால் எனக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை.

ஆரம்பத்தில் அவளிடம் பேச முயற்சித்தேன் . ஒரு நாள் அவள் தோழி என்னிடம் வந்தாள் .

“சொல்லு  அனிதா ..  “

“ஒண்ணு சொல்லணும் கார்த்திக்  .. கோபப்படமாடியே  .. “

” நீ  சொல்ல வரத சொல்றியா மொதல்ல  ? ” எரிச்சல் . எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்.

“பாரு  .. நீ இப்போவே கோபப்படற .. ஹரிணி சொல்லி தான் வந்தேன் .. நான் போறேன் ..  “

“ஹே .. ப்ளீஸ் போகாத .. நில்லு .. நான் கோபப்படல ” அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன் .

“கைய விடு கார்த்திக் ..  எல்லாரும் பாக்கறாங்க .. “

“ஸாரி .. ஸாரி   ..  ப்ளீஸ் சொல்லு “


“நீ அவகிட்ட பேச முயற்சி பண்ணாத இனிமே .. அவ பேச மாட்டா .. “

“நீ யாரு இத சொல்ல .. “

“எனக்கெந்த ஆசையும் இல்ல .. இத சொல்லணும் ன்னு .. அவ சொல்ல சொன்னா ..  மீட்டிங் ரூம் முன்னால நிக்கறது .. அவள ஃபாலோ  பண்றது .. இனிமே எதுவும் வேணான்னு சொல்ல சொன்னா  “

“இல்ல .. இருக்காது .. என் ஹரிணி அப்படி சொல்லியிருக்க மாட்டா .. “

“கார்த்திக் .. புரிஞ்சுகோ .. இட்ஸ் ஓவர் ..  அதையும் நீ மீறி .. “

என் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

“… நீ அவளை ஆபீஸ் ல தொல்ல பண்றன்னு .. எச். ஆர் கிட்ட கம்ப்ளைன்ட் .. “

“போதும் அனிதா .. போதும் .. ” கை கூப்பினேன். “உன் ஃபிரண்ட் கிட்ட போய் சொல்லு .. என்னால இனிமே எந்த தொல்லையும் இருக்காது அவளுக்கு .. ” அனிதா போய்விட்டாள் . ஹரிணியும் போய்விட்டாள். எல்லாமும் போய்விட்டது. Read the rest of this entry »

Tags: ,

 

இன்னொரு காதல் கதை – 1

சரியாக அன்றிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களால் திருமணம் நிச்சயமானது. இருவரின் குடும்பத்திலும் எங்கள் இருவரையும் பிடித்துப் போயிருந்தது. நியாமாகப் பார்த்தால் காதலர்கள் எல்லாரும் சார்லஸ் பாபேஜுக்கு தனியாக கோவில் கட்டி இரண்டாவது காதல் தினமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். என்ன திருமணம் மட்டும் ஆறு மாதங்கள் கழித்து . அதிலும் ஒரு சௌகரியம் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் .. கூடுதல் உரிமம். ஆறு மாதத்திற்கு ஆசை தீரக் காதலிக்கலாம்.ஓட்டுவது எப்படி. நவம்பர் மாதத்திற்கு நன்றி.

எனக்கு எல்லாமே புதிதாகத் தான் இருக்கிறது . ஹரிணியைப் போல ஒரு பெண் கற்பனையில் இருந்திருந்தாலும், நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதுவும் காதலித்து அது திருமணத்தில் வந்து முடியும் என்று .. ம்ம்ஹம்ம்.. எல்லாமே புதிதுதான் ..

சின்னப் பெண் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் திருமண நிச்சயத்திற்குப் பிறகு எவ்வளவு மாறிவிட்டாள். திருமணத்திற்குப் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்ற  திட்டமிடல்கள் . ஒரு சின்ன பிளாட் ..கொஞ்சமே நீல நிறத்தில்… இப்பொழுதைக்கு ஒரு சி.பி.செட் எக்ஸ்ட்ரீம்… இரண்டு மூன்று வருடங்களில் ஸ்விப்ட் ..   . எங்கள் படுக்கை அறையில் கொஞ்சம் வெளிர் ஊதா. படிக்கும் அறை அவளின் புத்தகங்களை வைக்க .. குட்டி ஜிம் எனக்கு ..  ஒரு ஆண் .. ஒரு பெண் ..அவர்கள் படிக்கும் பள்ளி ..  எல்லாவற்றிகும் ஒரு சிறு புன்னகையுடன் சரி என்று சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது.

இத்தனை வருடங்களாகப் பேசாத பேச்செல்லாம் மொத்தமாகப் பேசித் தீர்ப்பது போல பேசியிருக்கிறோம். அவளின் கனவுகள் மொத்தமும் அழகானது . சில அபூர்வமானவைகள் கூட. பேசிக்கொண்டே இருக்கும் போதே அவள் முகம் பார்த்துக் கொண்டே சட்டென்று வார்த்தைகள் இல்லாது போவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கன்னங்கள் இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு , சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்று பாடத் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

முதல் கட்டமாக சி.பி.செட் வாங்கியாகிவிட்டது. வேளச்சேரியில் பில்டருக்கும் சொல்லியாகிவிட்டது. ஈ.எம்.ஐ இல்லாமல் வாழ்கையை

பைக் வாங்கிவிட்டதால் இப்பொழுதெல்லாம் ‘கேப்’ கிடையாது. நேராக அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு, பின் என் வீட்டிற்கு. இன்னும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அது ஒரு வெள்ளிக் கிழமை. அவள் மயில் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். நானும் ஊதா நிறம் . இப்பொழுதெல்லாம் என்றைக்கு என்ன நிற உடை அணியவேண்டும் என்பதைக் கூட அவள் தான் தீர்மானிக்கிறாள். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிய வேண்டுமாம்.மாயாஜால் போய்விட்டு வருவதற்கு இரவு நேரமாகிவிட்டது . சோழிங்கநல்லூர் தாண்டுவதற்குள்ளாகவே மழை மொத்தமாக நனைத்துவிட்டது.

அவளது அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று . Read the rest of this entry »

Tags: ,

 

இதெல்லாம் ஒரு வேலையா என்று கூட பல முறைகள் நினைத்ததுண்டு. டெஸ்டிங் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை சரி தான் .. டெவெலப்பர்ஸ் என்ன நமக்கு மாமனா மச்சானா.. நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகவேண்டியது தான் .  என்ன இரவு கொஞ்ச நேரம் அதிகமாக விழித்திருக்க வேண்டும்.  இல்லை இதை இப்படியும் சொல்லலாம். அவர்களின் பகலில் விழித்திருக்க வேண்டும்.  அதிகமுறை யோசித்ததுண்டு . இவ்வளவு பயந்தவர்கள் எப்படி இத்தனை நாடுகளைத் தங்களின் கீழ் வைத்து வேலை வாங்குகிறார்கள் என்று.

 

இன்றைக்கு இது போதும் . வேலை முடிந்தாயிற்று . லிஃப்டில் இறங்கும் போதே வேலைகள் பற்றிய எண்ணங்களை இறக்கிவைத்திட வேண்டும் என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒப்பந்தம். ஒரு மணி கேபிற்கு என்னைத் தவிர யாரும் ஒரு மணிக்கே வரப்போவதில்லை . எல்லாரும் வந்து , செக்யூரிட்டி ரூட் போட்டுக் கொடுத்து வண்டி கிளம்ப எப்படியும் ஒன்னரை ஆகிவிடும்.

 

டைடலின் பின்புறத்திலிருந்து ஒரு அழகான வியு பாய்ண்ட் இருக்கிறது . இடது புறத்தில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் . அதன் உச்சிக்கும் எல்நெட் கட்டிடத்திற்கும் இடையில் அவ்வப்பொழுது அரிதாக நிலா எட்டிப் பார்க்கும். இன்றைக்கும் வானம் மொத்தமும் மேகமூட்டம். நட்சத்திரங்கள் பார்க்கும் வேலை கூட இல்லை. எனது வண்டி எண்ணை மட்டும் கேட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து ஐபாடை மாட்டிக் கொண்டேன்.  When you have everything .. What could you possibly desire ?The one you loved the most …  ஏகான் மொத்த சோகத்தையும் கண்களில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்.  பாடல் கேட்கும் எண்ணமும் இல்லாமலிருந்தது . ஏனோ சில சமயங்களில் எதுவுமே பிடிக்காமல் எரிச்சலாக இருக்கும். எல்லாரிடமிருந்தும் , எல்லாவற்றிலிருந்தும் தனிமைப்பட்டுவிடத் தோன்றும். ஒருவேளை எனக்கு அந்தப் பாடல் வரிகள் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம் .வெறுமனே கண்ணாடியை வெறித்துப் பார்த்தே அடுத்த சில நிமிடங்கள் கழிந்தன.

Read the rest of this entry »

Tags: ,

5
Jan

காதல் கதை

   Posted by: Rejovasan   in கதை நேரம்

வெயிலுக்கு முன்பே பனி பெய்திருந்த அந்நாளில் அவளைச் சந்தித்தேன் ..

தெருவினைத் தெளித்து வரைந்து கொண்டிருந்தாள் . கொஞ்ச நேரம் நின்று நனைத்து கொண்டிருந்தேன் .

பனியின் படலம் திரையிட்டு இருந்தும் , அவள் மட்டும் தெரிந்தாள் ஓவியம் போலவே .

மின்னல் அவள் பெயரா ? கண்கள் பார்த்தேன் .ஆமாம் என்றன .

குளிரில் நடுங்கும் உதடுகள் பார்த்தேன் .அதிலிருந்த வரிகளில் உதிர்ந்து கொண்டிருந்தன எனக்கான கவிதைகள் .

அணிந்திருந்தது அவளுக்கான பிரத்யேக ஆடையா இல்லை ஆடைக்கான பிரத்யேக அவளா ??

நெற்றி முன் விழுந்த முடி , தேடி வந்து கை தள்ள ; மீண்டும் என்றேன் .

ஒருமுறை பார்த்தாள் . திரும்பியே சிரித்தாள் .நொடியினில் மறைந்தாள்

தனியே நின்றேன் .

Read the rest of this entry »

Tags: ,

Page 2 of 212