
8
He felt now that he was not simply close to her, but that he did not know where he ended and she began.
- Leo Tolstoy
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னிடம் இருப்பது இந்த இனிமையான நினைவுகளும் , வாசனை நாட்களும் , அவள் உதட்டு ஈர ஞாபகங்களும் மட்டுமே.
அழுது அழுது கண்ணீர் எப்பொழுதோ வற்றிப்போயாகிவிட்டது. தினமும் உண்பது போல வலியையும் ஒரு அன்றாடச் செயலாக உட்கொள்ளப் பழகி நாட்களாகிறது.
இரவுகள் என் எதிரிகள். என் எல்லா இன்பங்களுக்கும் சாட்சியாக இருந்த இரவுகள். என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொல்லும் அதே இரவுகள். என் உறக்கம் திருடிக் கொண்ட வெண்ணிற இரவுகள். அழியாத மச்சம் போல எனைச் சுற்றிலும் கவிந்திருக்கும் என் எல்லா நினைவுகளையும் போலவே இந்த இரவுகளையும் அறவே வெறுக்கிறேன்.
நன்றாக நினைவிருக்கிறது அந்த இரவு.
மே மாதம் . 29 ம் நாள் …
வழக்கம் போல நான் வீட்டுக்குள் நுழையவும் அவள் என்னை அழைக்கவும் சரியாக இருந்தது.
“என்னடா பண்ற ?”
“உன்ன தான் நெனச்சிட்டு இருக்கேன் ..”
“சும்மா பொய் சொல்லாதடா ..”
“கரெக்டா கண்டு பிடிச்சிட்ட .. டிரஸ் சேஞ் பண்ணட்டு இருக்கேன்னு சொல்ல ஒரு மாதிரி இருந்தது .. “
“அதான பார்த்தேன் .. சரி அப்படியே உன்கிட்ட இருக்கறதிலேயே சுமாரான ஒரு டிரெஸ்ஸ எடுத்துப் போட்டு சீக்கிரம் ரெடி ஆகு பார்ப்போம் ..”
“இந்த ராத்திரில ரெடி ஆகி என்ன பண்ணப் போறேன் .. ”
கொஞ்சம் நேரம் இடைவெளியில் , பதில் வந்தது.
“அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”
“ஓ தனியா இருக்க பயமா இருக்கா … நாம ஃபோன் பேசிட்டே இருக்கலாம் … நீ அப்படியே தூங்கிடு ..”
“உன்னை வந்தனா லவ் பண்ண மாட்டேன்னு சொன்னதில தப்பே இல்ல…” அடிக்கடி வந்தனாவைப் பற்றி விளையாட்டாக நாங்கள் பேசிக்கொள்ளத் துவங்கியிருந்தோம். விளையாட்டாக .. அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு , இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மீண்டும் சொன்னாள் “அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”
“ச்சே .. நான் இவ்ளோ மக்கா .. சார் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் .. ”
“என் வீடு தெரியுமா ? அட்ரெஸ் வேணாமா ..?”
“உன் வீட்டு அட்ரஸ் மட்டுமில்ல .. உன் ஏரியா ப்ளூ ப்ரிண்டே என்கிட்டே இருக்கு .. நீ ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண அடுத்த நாளே சென்சஸ் எடுத்தாச்சு .. ”
“திருட்டுப் பய நீ .. ஆனா இப்பவே சொல்லிறேன் .. வீட்டுக்கு வந்து நல்ல பிள்ளையா நடந்துக்கணும் … இல்லன்னா வரவே வராத .. ”
“சொல்லிட்டேல .. எவ்ளோ சமத்துப் பிள்ளையா நடந்துக்கறேன்னு மட்டும் பாரு .. ஆனா என்ன, என் கை என் அளவுக்கு நல்ல பிள்ளை இல்ல.. சொன்ன பேச்சே கேக்காது .. ட்ரை பண்றேன் .. ”
Read the rest of this entry »
Tags: Love story, Vennila