Posts Tagged ‘’

 

 நன்றி : யூத் புல்.விகடன்.காம் 

 எல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .

 

ஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..

 

“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”

 

” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .

 

” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”

 

வழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .

 

ஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .

Read the rest of this entry »

Tags: ,

 

நன்றி : யூத் புல்.விகடன்.காம்

 

                       பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம்  தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .

 

  தினமும் காலை எழுந்ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்

 கேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும்  வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …

 

  அவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .

 

 “என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா !”

 

இந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .

Read the rest of this entry »

Tags: ,

 

சர்வம்-4

சர்வம்-4

“அப்பூர்வாஆஆஆ “

 

 

 

“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .

தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….

Read the rest of this entry »

Tags:

சர்வம்-3

சர்வம்-3

“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “

தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .

மூன்று நாட்களுக்கு முன்பு ,

Read the rest of this entry »

Tags:

சர்வம்-2

சர்வம்-2

அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .

எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .

அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .

Read the rest of this entry »

Tags:

1
Sep

சில உண்மைகள் …

   Posted by: Rejovasan   in கதை நேரம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன . இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த மாதம் சொர்க்கத்தில் தினமும் பல தாம்பூலங்கள் மாற்றப் பட்டிருக்க வேண்டும் . எத்தனை திருமணங்கள் . இருந்தும் எனக்கு ஏனோ இந்தத் திருமணத்தில் அதிக ஆர்வம் . காரணம் ?? உண்மையில் தெரியாது . இந்த கதை படித்து முடித்ததும் இதே எண்ணம் உங்களுக்கும் தோன்றக் கூடும் .ஆனால் உத்திரவாதம் ஏதும் தருவதற்கில்லை

மணமகன் மேடையில் வந்தமர்ந்து சரியாக மூன்று நிமிடங்கள் இருபத்தேழு வினாடிகள் ஆகின்றன . அவன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை அவன் நண்பன் துடைத்துக் கொண்டிருந்தான் தன் திருமணம் பற்றிய கனவுகளோடு . மஞ்சள் பூசப்பட்டிருந்த தேங்காயின் கொண்டையில் பூ வைக்கப் பட்டிருந்தது . அது அவிழ்ந்து விழும் வண்ணம் ப்ரோகிதர் தந்த கெமிக்கல் கலந்த மஞ்சள் பூசப்பட்டு அவசரமாக நிறமேறிய அரிசி தூவப்பட்டுக் கொண்டிருந்தது . மணப்பெண் கூரைப்பட்டு கட்டிக் கொண்டிருந்தாள் உள்ளே .அல்லது கூரைப்பட்டால் சுற்றப்பட்டுக் கொண்டிருந்தாள் . மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம் . அரைஞாண் கயிறு , மேலும் பாதுகாப்பிற்கு பெல்ட் அணிந்தும் அடிவயிற்றில் கனமாக இருப்பது அவன் அடிக்கடி தொட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தையிலேயே தெரிகிறது .

“பொண்ண அழைச்சிண்டு வாங்கோ ” காத்திருந்தது போல தோழிகள் சூழ தரையை ஆராய்ந்து கொண்டு புதிதாக வெட்கப்படக் கற்றுக் கொண்டவள் போல இதுவரை வாழ்ந்த அத்தனை நாட்களுக்குமாய் சேர்த்து கையிலிட்டிருந்த மருதாணியைக் காட்டிலும் சிவந்து போய் வந்து கொண்டிருந்தாள் .

சின்ன மேடையில் கொள்ளாத அளவு கூட்டம் . மாற்றி மாற்றி மாலையிட்டுக் கொண்டிருந்தார்கள் . போட்டு வைத்தார்கள் . காலில் விழுந்தார்கள் . எங்கிருந்தோ பிடுங்கி வந்திருந்த வாழைக் கன்றை கயிறு போட்டுக் கட்டினார்கள் . கையில் நீரிடார்கள் .நெருப்பில் நெய்யிட்டார்கள் . முன்னாலிருந்த தூண் பார்க்க விடமாட்டேன் என்றது .அருகில் வேறு ஒரே இரைச்சல் .

“மாப்பிள்ள வீட்ல வரதட்சனையே வேண்டம்னுட்டாங்கலாம்”

Read the rest of this entry »

Tags:

 

 

 

“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”

 

உபன்யாசகர் தெலுங்கில் சொல்லிக் கொண்டிருப்பதை நன்றாகத் தமிழ் தெரிந்தவர்கள் , இன்னும் இதை விடத் தெளிவாக மொழிபெயர்க்கக் கூடும் .

 

இடம் : விசா பாலாஜி திருக்கோயில் .

 

ஒருமுறையாவது ஹைதராபாத் வந்தவர்கள் ‘விசா பாலாஜியைப் ‘பற்றிக் கேள்விப் படாமல் இருந்திருக்க முடியாது என நினைக்கிறேன் .அவருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது , அவருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் என்ன தொடர்பு என்பது அவருக்கே தெரிந்த தொழில் ரகசியம் .

 

சரியாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கி , இந்த ஊர் தெலுங்கு , இந்தி , உருது கலந்த பெயர் சொல்ல முடியாத ஹைப்ரிட் மொழி தெரியாதவர்கள் ,டாக்சி வாலாவிடம் அவன் சேட்டுக்குக் கட்ட வேண்டிய வட்டிக்கும் சேர்த்து முன்னூறு  வரை அழுது ‘சிலுக்குரு’ போயும் பாலாஜியை தரிசிக்கலாம் . சரியான பஸ் நம்பர் கண்டுபிடித்துச் சென்றால் பத்து ரூபாய் கூட  ஆகாது . ஷேர் ஆட்டோவில் சென்றால் அதிகபட்சம்  இருபது ரூபாய் . நம்மூர் போல எல்லாம் சம்பல் பள்ளத்தாக்கில் இருந்து வந்தவர்கள் அல்ல இங்கே .

 

எங்களுக்கு அந்தக் கவலையே கிடையாது . எங்கள் நிறுவனத்திலேயே  லோன் போட்டு , இரண்டு மாதங்களுக்கு முன்பு தான்  வண்டியும் , ஹெல்மேட்டும் வாங்கி வைத்திருந்தோம் நாங்கள் …… நானும் விஜயும் .இங்கு வந்து வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது . எங்களைப் பற்றி சொல்ல சுவாரசியமாக என்ன இருக்கிறது , சென்ற வாரம் தான் எல் போர்டை மாற்றினோம் என்பதைத் தவிர .விசா பாலாஜியப் பற்றிப் பார்ப்போம் கொஞ்சம் .

 

இது போன்ற ஒரு ஒதுக்குப் புறத்தில் தெலுங்கு பட ஷூட்டிங் எடுக்காமல் கோவில் கட்டியவரைப் பார்த்தால் தாராளமாகக் கை  குடுக்கலாம் . ஆட்டு மந்தை அடைத்து வைக்க , பட்டை அடைத்து கொஞ்சம் சதுரம் போன்ற வடிவில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது போலிருந்தது அந்தப் பேருந்து நிலையம் .இறங்கியதுமே ஒரு சிறுமியின் தெலுங்கில் மாட்டிக் கொண்டோம் .

 

” ரண்டி , பாலாஜிகு தெக்காய தீசுகொண்ட” என நச்சரித்துக் கொண்டிருந்தாள் .

விஜய் முடிந்த அளவு ” ஒத்த … ஒத்த … ” என்று சொல்லிப் பார்த்தான் . அவள் நேராக கடைக்கு இழுத்துக் கொண்டு போன பின் தான்  தான் விட்டாள் . தேங்காய் பழம் வாங்கியதற்கு இலவசமாக செருப்பு  வைத்துப் போகச் சொன்னாள் .

 

பள்ளி போகிறவளாக இருந்திருந்தால் ஆறாம் வகுப்பில் பிரித்திவி , சம்யுக்தாவை எப்படி அலேக்காக குதிரையில் தூக்கிச்  சென்றிருந்திருப்பார் என சரித்திர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருப்பாள் .பத்து ரூபாய் அதிகம் தந்தேன் . முப்பது ரூபைகே பாபு என பத்தை திருப்பித் தந்தாள் . நேர்மைக்கு என்றுமே ஏழ்மை தான் .

Read the rest of this entry »

Tags:

 

சர்வம் 1

சர்வம் 1

அபூர்வாவை ஒருமுறை பார்த்தவர்களால் நிச்சயமாய் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது . சாதாரணமாக வெறும் அழகென்று மட்டும் அதைச் சொல்லி விட முடியாது .நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன் . ஆனால் இவள் கொஞ்சம் அபூர்வமானவள் பெயரைப் போலவே .இவ்வளவு நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணமில்லாமல் இல்லை . அவள் வீணையைக் கையிலெடுத்த பொழுது தரகர் சத்தமாக காபியை உறிந்தது வரை நியாபகமிருக்கிறது . “எங்கயும் ஓடிட மாட்டா .. இப்போவே பார்த்து தீர்த்திடாத .. கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசனை வந்திடும் ” என்று பெரியம்மா என் விலாவில் இடிக்கும் வரை அவளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை .எல்லாரும் சிரித்தார்கள் என்றாலும் அபூர்வாவின் மௌனப் புன்னகை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது என் கண்களில் .

காபி தம்ளரை வாங்குகையில் வேண்டுமென்றே அவள் விரல் தொட்ட ஸ்பரிசம் தான் என்னுள் எழுகிறது ஒவ்வொருமுறை அவளைத் தொடும் போதும் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகிறாள் .

Read the rest of this entry »

Tags: