11
Aug

பால்ய நதி

   Posted by: Rejovasan   in நான் ரசிகன்

 

 

Baa Baa Black Sheep சொன்ன காலங்கள் நினைவிலில்லை . ஆனால் அம்மாவின் விரலைப் பிடித்து அழுதுகொண்டே , போகமாட்டேன் என மணலில் விழுந்து புரண்ட என் முதல் வகுப்பறை முன்னால் கொட்டப்பட்டிருந்த மணலின் சூடு நன்றாக நினைவிலுள்ளது . இன்னமும் பச்சை நிறம் பூசப்பட்ட அந்த மரச்சட்டக் கதவு காற்றிலாடியபடியே இருக்கிறது . எவ்வளவு தேற்றியும் அடங்காத என் அழுகை , கௌசல்யா டீச்சர் தந்த ஒரு mahalacto king இல் அடங்கிப் போனது . ஒரு வேளை தேவதைகளுக்கும் எனக்குமான உறவு பூத்தது கூட அப்பொழுது தானா . அந்த மிட்டாய் உறையில் அழகான பெண் செய்து கொடுத்த அந்த நண்பன் யாரென இன்னமும் நினைவு படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

 

யோசித்துப் பார்கையில் பால்யத்தைக் கடந்து வெகுதூரம் வந்து விட்டது போல் இருக்கிறது . பால்யம் ஒரு பெருங்கனவைப் போல அவ்வப்பொழுது வந்து போய்க்கொண்டிருக்கிறது .

 

எப்பொழுது தொலைக்கத் துவங்குகிறோம் பால்யத்தை ?? பால்யத்தை எங்கேனும் எப்பொழுதேனும் நாம் தேட முற்பட்டதுண்டா ?? எதேச்சையாக ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் காண நேரும் பால்ய கால நண்பனுடன் முதலில் சென்று அறிமுகம் செய்து கொள்வதை எது தடுக்கிறது ???

 

மூன்றாம் வகுப்பில் நம்மை விட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று தூக்கம் தொலையச் செய்தவளை , ஏதோ ஒரு தெருவில் கணவனின் அதட்டல்களுக்குப் பின் தலை குனிந்து செல்வதைப் பார்க்க நேர்கையில் சட்டென்று ஏன் ஒரு வன்மம் தோன்றுகிறது .

 

அடித்துக் கொண்டும் , கைகள் கோர்த்தும் திரிந்த சிறு வயதுத் தோழி ஒருத்தியை இப்பொழுது காண்கையில், எட்ட நின்று பேசும் இடைவெளியினுள்ளா ஒளிந்து கிடக்கிறது பால்யம் ?? சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகையில் நாமறியாமல் ஒரே ஒரு பந்து மட்டுமாவது நின்று பார்த்து விட்டுச் செல்லத் தோன்றுகிறதே , அந்த உணர்வுக்குப் பெயர் என்ன ???

பால்யமும் , அது குறித்தான கேள்விகளும் எழுப்பும் அலைகள் புதிரானவை . அவைகளை விளக்கும் வயது தொட்டிருக்கும் பொழுதே பால்யம் நம்மை விட்டு விலகத் துவங்கியிருக்கிறது . ஒரு மாய வலையாகவே பால்யம் நம்மை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

 

தோழன் பாலாவைத் தொடர்ந்து , புத்தகத்தில் நா. முத்துக்குமாரின் பாலகாண்டம் குறித்த எனது பார்வை இங்கே ….

 

பால்யத்தின் மாயச் சுழலில் சிக்கும் இலையாகி நதியின் போக்கில் சென்றிருப்போம் சில மைக்ரோ யுகங்களாவது …

  

நன்றி ,

சேரல் ,

ஞானசேகர் .

 

 

Tags: , , ,

 

 

நேற்று என்பது மீட்டப்பட்டுவிட்ட இசைக் குறிப்புகளைப் போல .. அழகானது எனினும் எவ்வளவு முயன்றாலும் எப்பொழுதுமே  மீண்டும் மீட்ட முடியாதது.. மாறாக ஒரு அழகான மாலை நேரத்தில் ஒரு கோப்பைத் தேநீருடன் , பதிவு செய்யப்பட அதே இசைக் குறிப்புகளைக் கேட்டு ரசிக்கலாம் ..

 

ஆகஸ்ட்  4, 2003 … தேடலுடனும்  , குறுகுறுப்புடனும்  , புது இடம் , புதிய சூழ்நிலைகள்  பற்றிய பயத்துடனும்  வாழ்வின் ஒரு புதிய பயணத்தில் நுழைந்த நாள் …. எல்லாமே நட்பு பார்த்துக் கொண்டது .. இன்று எங்கள் பயணத்தின் ஏழாவது வருடம் துவங்குகிறது …

 

நாங்கள் மீட்டிய சில இசைக்குறிப்புகளை உங்களோடு சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன் …

 

நாங்களே இசையமைத்து இயக்கிய கல்லூரி பாடலுக்காக எழுதிய வரிகள் ..  எங்கள் கல்லூரிக்காக ….  

Read the rest of this entry »

Tags: , , , , , ,

2
Aug

நாடோடிகள்

   Posted by: Rejovasan   in சுவடுகள்

நாங்க நாலு பேரு :-)

நாங்க நாலு பேரு :-)

எங்களின் பாதைகள்

கிளைபிரிந்திருக்கலாம் …

எங்களுக்கான பயணங்கள்

வெவ்வேறு திசைகளில்

பணிக்கப்பட்டிருக்கலாம் …

இருந்தும்

நாட்கள் கழித்து மீண்டும்

சந்திக்கையிலெல்லாம்

கணநேர மௌனங்கள் சொல்லிடும்

நாங்கள் யார் என்பதை ….

நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் உங்கள் நெருக்கமானவர்களை நாங்கள் நினைவுபடுத்தப் போவது மட்டும் உறுதி .

Read the rest of this entry »

Tags: , , , ,

சில விஷயங்கள் அமையப் பெற்றதற்காக சில சமயங்களில் மட்டுமே கர்வங் கொள்ள முடியும் . அது போன்ற ஒரு தருணம் தான் இதுவும் . சில காலங்கள் பார்த்துப் பார்த்து ரசித்து விட்டு , முதல் நாள் வகுப்பில் நுழையும் ஒரு குழந்தையின் தயக்கத்துடனும் , காதலைச் சொல்லப் போகும் தவிப்புடனும்  சில கவிதைகளுடன் நேற்று தான் பதிவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது . மழையில்லாத ஒரு  மாலை நேரத்து  மின்னல் போல்  சட்டென்று கடந்து போய்விட்டது ஒரு வருடம் . எத்தனை உறவுகள் , எத்தனை பரிவுகள் , எத்தனை உரிமையான செல்லக் குட்டுகள் …

 

உங்கள் அத்தனை அன்புக்கும் மௌனங்கள் மட்டுமே பதிலாய் என்னிடம் .. இந்த வாரம் மேகத்தில் மிதப்பதற்கு என எனக்கு எழுதி வைக்கப் பட்டிருக்கிறது போலும் . திங்களன்று உயிரோடை முடிவுகள் .. நேற்று சுவாரசிய தளத்திற்கான தேர்வு .. அதுவும் நான் வியந்து உள்வாங்கும் கவிதைகளின் சொந்தக்காரர் பிரவின்ஸ்காவிடமிருந்து ..

 

 

 

 

 

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா .. !  உங்கள் அறிமுகத்தை நியாப்படுத்த முயன்ற வரை முயற்சி செய்கிறேன் .. :-)  

 

 

ஏனென்று தெரியவில்லை (அட நெஜமா பா ! ) என் கவிதைகள் காதலைத் தழுவிக்கொண்டோ இல்லை அதன் நிழலின் பின் ஒளிந்து கொண்டோ தான் எட்டிப்பார்த்திருக்கின்றன . இதுவரையிலும்…..  அவள் சில அழகிய குறிப்புகளும் , கனவில் வருபவளிலும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ !   சேரல் சொன்னது போல் அழகான விடுமுறை தரலாமோ காதல் கவிதைகளுக்கு ?  தரலாம் :-)

 

எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட  , ஆரம்ப நாட்களைப் போல ….

 

பரிட்சார்த்தமான சில கதை முயற்சிகளையும் , காதலல்லாத கவிதைகளையும் தர முயற்சி  செய்கிறேன் . உங்கள் அன்பும் , சில செல்லக் கண்டிப்புகளும் எப்பொழுதும் என்னுடன் என்ற நம்பிக்கையுடன் ..

 

 

நன்றி பிரவின்ஸ்கா !

 

நன்றி நண்பர்களே !

 

 

 

ப்ரியமுடன் ,

ரெஜோ

 

 

பின்குறிப்பு :

 

           இந்த விருதை இன்னும் ஆறு பேருக்குத் தர வேண்டும் . கிட்டத் தட்ட என் பிரியமானவர்கள்  விரும்பும் தளங்கள்,   அனைவரும் அனைத்தும் பரிந்துரை செய்யப் பட்டுவிட்டதால்  புதியதாக தளம் ஆரம்பித்திருக்கும் , ஆரம்பிக்கப் போகும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளோடு முடித்துக் கொள்கிறேன் .

Tags:

“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”

தலையணை தினமும்

உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே

கண் சாய்க்கிறேன்.

——————————————————–

Read the rest of this entry »

Tags:

 

 

ஒருவேளை வெறும் சம்பிரதாயமாக  போய்விடுமோ என எண்ணி தான் இரண்டு நாட்களாக இதைப் பதிவிடாமல் இருந்தேன் . இருந்தும் மனதில் இருப்பதைச் சொல்லித் தானே ஆக  வேண்டும் .

 

உயிரோடை முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகின்றன . வெகு நாட்கள் கழித்து வெற்றி தோல்வி பற்றி யோசிக்க வைத்த ஒன்று இப்போட்டி .

 

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது வடகரை வேலனுக்கும் , வெயிலானுக்கும் தான் . எனது தளத்தினை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி , அவ்வப்பொழுது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து , தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்குபெறத் தூண்டியவர்கள் அவர்கள் தான் . உங்களுக்கு என்றுமே நான் கடமைப் பட்டிருக்கிறேன் .

 

 

சேரல் .  எனது பிரியத்திற்குரிய அண்ணா . கல்லூரியில் நாங்கள் எல்லாம் அ  ன்னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கையில் , மரபை மீறிய கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தவர் . சேரல் பற்றி சொல்லி விட்டு ப்ரவின்ஸ்கா பற்றி சொல்லாவிட்டால் எப்படி :-) இவர்கள் இருவரும் எனது தளத்தைப் படிக்கிறார்கள் என்பதே நான் வானில் பறக்கப் போதுமானது. ஏதாவது பின்னூட்டம் வந்தால் சொல்லவும் வேண்டுமா …

 

யாரையாவது  பார்த்து  என்னைப் போலவே பேசுகிறானே , யோசிக்கிறான் என்று தோன்றியதுண்டா ? அப்படி எனக்குத் தோன்றிய அன்பர் தான் சத்யமணி . இன்னும் வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவர் அழகான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . வாழ்த்துகள் தோழர் :-)

 

எனது கவிதைகளை ஏதாவது ஒன்று உருப்படி என்பதை அனுஜன்யாவும் , கே.ரவிஷங்கரும் நன்று என்று ஒரு வார்த்தை சொன்னாலே வகைப் படுத்திக் கொள்வேன் .:-)

 

மச்சான் ரிஜோ என்று செல்லமாக குட்டு வைக்கும் இளவரசன் , சார் சும்மா கவிதைன்னு இப்படி எல்லாம் எழுதக் கூடாது என்று கேள்விகளாகக் கேட்கும் அப்பாஸ் , நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறெதுவும் இதுவரை சொல்லாத ரேவதி எல்லாருமே என் சக பயணிகள் .

 

எல்லாவற்றுக்கும் மேல் எப்பொழுதும் என்ன எழுதினாலும் முதலில் படித்து உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்கள்  என் பிரியத்திற்குரிய நண்பன் பாலாவும் , பிரிய தங்கை சத்யாவும் . அவர்களுக்கு நன்றிகள் எல்லாம் கிடையாது , எப்பொழுதும் என் எழுத்துகளை முதலில் படிக்கும் தண்டனை மட்டுமே .

 

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக்கும் காரணமான உயிரோடை  லாவண்யா அவர்களுக்கும் , போட்டி நடுவர்களுக்கும் நன்றிகளும் , அவர்களின் இந்த சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும் :-).

 

போட்டியில் வெற்றி பெற்ற , மற்றும் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-)  

 

 

மேலும் எப்பொழுதும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களுக்கும் , பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளும் அன்புகளும் :-)  

 

ப்ரியமுடன் ,

ரெஜோ 

Tags:

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

Read the rest of this entry »

Tags: ,

1:

 

எனக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத் தெரியாது . ஆனால் இந்தக் கதையின் அவனைப் பற்றி எனக்கு ஓரளவேனும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் . குறைந்த பட்சம் அவனது ஒரு இரவின் பாதியாவது .

 

இரவு . ஆமாம் .. இரவே தான் . என்னை நானே முதலீடு செய்து கொள்ளும் நேரம் அதுதான் .  இதைச் சொல்வதற்காக எனக்கு எந்த வருத்தமோ பச்சாதாபமோ கிடையாது . நான் அப்படித்தான். அதில் எனக்கு ஒரு கர்வம் கூட உண்டு. உங்களுக்காக பாரம் சுமந்து ஓவ்வொரு நாள் காலையும் உயித்தெழ என்னால் மட்டுமே முடியும். நிற்க . இந்தக் கதை என்னைப் பற்றி அல்லவே. கொஞ்சம் கவிதைகள் படித்தாலே நான் யார் என்பதைத் தேடச் சொல்லி , தேடித் தேடி இறுதியில் நான் என்பதே எஞ்சி நிற்கிறது. அவனுக்கு வருகிறேன் .

 

என் பெயர் .. ஓ .. கதையின் ஆரம்பம் என்றால் பெயர் சொல்ல வேண்டுமல்லவா. இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாமல் அநேகம் பேர் விரலைக் கூடத் தொடுவதில்லை. நான் சந்தித்திருக்கும் அநேகம் பேரிடம் முதலில் சந்திக்கும் கேள்வி என் பெயர் பற்றியதாகத் தான் இருக்கிறது . அந்த நமைச்சல் உங்களுக்கும் இருப்பின் தெரிந்து கொள்ளுங்கள் அந்த இரவில் என் பெயர் வைஷ்ணவி.

 

இந்தப் பெயரும் அவன் வைத்தது தான்.

 

Read the rest of this entry »

Tags: ,

 

 

 

 

 

 

 

“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.

 

“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”

 

இது எங்கள் மறைவிடம்.  எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.

 

சுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.

 

 

என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.

 

 

அவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.

 

ஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

Read the rest of this entry »

Tags: , ,

  

குஜய் TV நேயர்களுக்கு டோபிநாத்த்தின் வணக்கங்கள் .. Welcome to the show ,மாசிலாமணி- The Team Strikes Back Again …  சொல்லுங்க nagul .. Ho do u feel ??

 

அய்யே .. மாமே .. நீ இன்னும் அந்த award function hang over ல இருந்து வெளிய வரவே இல்லியா .. எல்லாருகிட்டயும் அத்தையே தான் கேப்பியா .. தள்ளு தள்ளு இந்த படத்துக்கு நானே போதும் ..

 

வணக்கம் பாஸ் .. நான் தான் ..

 

எனக்கும் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தோரணை .. மூணு நாளுக்கு முன்னாடி முத்திரை .. நேத்து மாசிலாமணி .. திருந்தவே மாட்டேனா நான் ..

 

காதலில் விழுந்தேன் பார்த்த அப்போவே உசாராயிருந்திருக்கணும் .. எல்லாரும் படம் மொக்க மொக்கன்னு சொல்றானுங்களே .. அப்படி என்ன தான் மொக்கையா இருக்கு பாக்கலாமேன்னு போயிட்டேன் ..

 

அதே மாதிரி ஒரு சாயங்காலம் .. அதே தியாகராஜா தியேட்டர் .. அதே மாதிரி மழை கூட விழுந்தது .. நானும் , ராம் ன்னு ஒரு அப்பாவியும் ஆப்பீஸ்ல இருந்து வீட்டுக்கு திரும்பும் போது . டைடல் பார்க் சிக்னல் ல மனசு மாறி தியேட்டர் பக்கம் ஒதுங்கிட்டோம் .. உள்ள போகும் போதே நாக்க மூக்க style ல ஒரு பாட்டுக்கு அதே செட்ல நகுல் ஆடிட்டு இருந்தார் .. அப்போவே படம் எப்படி இருக்கும் ன்னு புரிஞ்சு போச்சு … 

 

“சீக்கிரம் கிளம்புங்கன்னு சொன்னேன் .. பாருங்க இப்போ படம் ஆரம்பிச்சுருச்சு .. எவ்ளோ நேரம் போச்சோ .. பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேளுங்க எவ்ளோ நேரம் ஆச்சுன்னு “ என்றான் ராம் ..

 

“ இப்போ தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு .. “

 

“ டேய் பத்து நிமிஷம் ஆச்சாண்டா .. “

 

“ சரி அப்டியே ஹீரோயின் இன்ட்ரோ வந்திருச்சான்னு கேளுங்க .. “

 

“ @!%^#%^$%$ “

 

சும்மா சொல்லக் கூடாதுங்க .. போன படத்துல பொணம்  மாதிரி வாழ்ந்திருந்த சுனைனா , இந்தப் படத்தில மார்ச்சுவரில இருந்து எழுந்து வந்தா மாதிரி அவ்ளோ fresh ஆ இருக்காங்க … என்னம்மா மூஞ்சில அபிநயம் புடிக்கறாங்க .. படத்துல அவங்க பரதம் கத்துகறாங்கலாமாம் .. என்ன கொடுமை சார் இது ???

Read the rest of this entry »

Tags: , , , ,