எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை
———————————————————
“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
——————————————————–
எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை
———————————————————
நீ கடந்து போன
நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்
ஒரே வாசம்
திருடியது நீயா ?? பூக்களா ??
—————————————————
ஜன்னல் திறந்ததும்
ஆச்சர்யம் கொள்ளாதே
வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து
வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..
———————————————————–
உன்னை நினைவு கூறும்
அடையாளங்களைச் சந்திக்கும்
போதெல்லாம்
புதியதோர் கவிதையையும்
சந்திக்கிறேன்
——————————————————————-
காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
——————————————————-
உதடுகள் சில்லிட்டுப்போகும்
ஒரு முன்பனிக் காலத்தில்
உன் படுக்கையிலிருந்து
கனவு கலையாமல்
தூங்கும் தேவதையாய்
தூக்கிச் செல்வேன்
சிறகுகள் தந்து ..
———————————————-