அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …
அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .
நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .
நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .
நான் தான் அபூர்வா இப்பொழுது .
இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம் உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை
நிறுத்த வேண்டும் .
“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்
அவளையும் கேட்பது .
நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .
Read the rest of this entry »
அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .
“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”
கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”
“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”
Read the rest of this entry »
“அபூ ….அபூ ..ர்ர்ர் … வ ..வா … வேணாம் .. கிட்ட வராத .. என்னை ஒன்னும் பண்ணிடாத … ” வாய் குழறியது . பின்னாலேயே நகர்ந்து சென்றேன் .சுவர் இடித்தது .. கீழே இறங்கினாள் . கொடியில் கிடந்த துண்டை எடுத்து சுற்றிக் கொண்டாள் . நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன் . கீழே கிடந்த கத்தியை எடுத்தாள் . நிதானமாக என்னை நோக்கி நடந்து வந்தாள் .
“ப்ளீஸ் .. வேணாம் .. என்ன விட்டிடு ” கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை .. இடது கையை ஊன்றி சுவற்றில் சாய்ந்து எழுந்தேன் . கை நரம்பு வலித்தது . மீண்டும் கீழே விழுந்தேன் .கத்தியை இரண்டு கைகளாலும் பிடித்து என்னை நோக்கி உயர்த்தினாள்.
“இப்போ என்ன … என்னை கத்தியால குத்தனுமா ? இந்தாங்க .. குத்துங்க ..” என்னை நோக்கி நீட்டினாள் .
“இல்ல .. வேணாம் .. தப்பு .. பண்ணிட்டே .. ன் ..” வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது .
“சரி நானே குத்திக்கறேன் ” உயர்த்திய கைகளை தன் மார்பை நோக்கிச் செலுத்தினாள். வெள்ளை ரத்தம் பீச்சிட்டுக் கொண்டு என் முகத்தின் மேல் அடித்தது . சிரித்தாள் .. மிக சப்தமாக . வாஷ் பேசின் குழாயைத் திறந்து பொறுமையாக கத்தியைக் கழுவத் தொடங்கினாள். என் நரம்புகள் இழுத்துக் கொண்டன . மொத்தமாக நினைவிழப்பதற்கு முன் கடைசியாக உதடுகள்
பிரிந்தன .
“சா .. சாதனா .. நீ எங்கே ???”
Read the rest of this entry »

சர்வம்-4
“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .
தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….
Read the rest of this entry »

சர்வம்-3
“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “
தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .
மூன்று நாட்களுக்கு முன்பு ,
Read the rest of this entry »

சர்வம்-2
அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .
எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .
அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .
Read the rest of this entry »

சர்வம் 1
அபூர்வாவை ஒருமுறை பார்த்தவர்களால் நிச்சயமாய் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது . சாதாரணமாக வெறும் அழகென்று மட்டும் அதைச் சொல்லி விட முடியாது .நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன் . ஆனால் இவள் கொஞ்சம் அபூர்வமானவள் பெயரைப் போலவே .இவ்வளவு நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணமில்லாமல் இல்லை . அவள் வீணையைக் கையிலெடுத்த பொழுது தரகர் சத்தமாக காபியை உறிந்தது வரை நியாபகமிருக்கிறது . “எங்கயும் ஓடிட மாட்டா .. இப்போவே பார்த்து தீர்த்திடாத .. கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசனை வந்திடும் ” என்று பெரியம்மா என் விலாவில் இடிக்கும் வரை அவளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை .எல்லாரும் சிரித்தார்கள் என்றாலும் அபூர்வாவின் மௌனப் புன்னகை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது என் கண்களில் .
காபி தம்ளரை வாங்குகையில் வேண்டுமென்றே அவள் விரல் தொட்ட ஸ்பரிசம் தான் என்னுள் எழுகிறது ஒவ்வொருமுறை அவளைத் தொடும் போதும் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகிறாள் .
Read the rest of this entry »