நேற்று என்பது மீட்டப்பட்டுவிட்ட இசைக் குறிப்புகளைப் போல .. அழகானது எனினும் எவ்வளவு முயன்றாலும் எப்பொழுதுமே மீண்டும் மீட்ட முடியாதது.. மாறாக ஒரு அழகான மாலை நேரத்தில் ஒரு கோப்பைத் தேநீருடன் , பதிவு செய்யப்பட அதே இசைக் குறிப்புகளைக் கேட்டு ரசிக்கலாம் ..
ஆகஸ்ட் 4, 2003 … தேடலுடனும் , குறுகுறுப்புடனும் , புது இடம் , புதிய சூழ்நிலைகள் பற்றிய பயத்துடனும் வாழ்வின் ஒரு புதிய பயணத்தில் நுழைந்த நாள் …. எல்லாமே நட்பு பார்த்துக் கொண்டது .. இன்று எங்கள் பயணத்தின் ஏழாவது வருடம் துவங்குகிறது …
நாங்கள் மீட்டிய சில இசைக்குறிப்புகளை உங்களோடு சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன் …
நாங்களே இசையமைத்து இயக்கிய கல்லூரி பாடலுக்காக எழுதிய வரிகள் .. எங்கள் கல்லூரிக்காக ….
மழை மேகம் மறைந்தே போகும்
இலையுதிர் காலம் இது
பிரிவோம் சந்திப்போம் - நாம்
பிரிவோம் சந்திப்போம்
எங்கே இனி எங்கே
என்றே கண்கள் தேடும்
நினைவெல்லாம் வலி பேசும்
பிரிவோம் சந்திப்போம் - நாம்
பிரிவோம் சந்திப்போம்
இதயம் கணக்கும்
இமையைக் கொஞ்சம் நனைக்கும்
இனி இல்லை இவர்கள் கண்முன்னாலே
வேண்டாம் இந்த மாற்றம்
மனமும் கெஞ்சிக் கேட்கும்
கை ரெண்டும் குலுக்கி பிரியும் நேரம்
நம் விழி திரண்ட இரண்டு முத்தில்
உறைந்தே கிடக்கும் நமது நட்பு
பிரிவோம் சந்திப்போம் - நாம்
பிரிவோம் சந்திப்போம்
கடல் சேர்ந்த நதியை
நிலம் மீண்டும் அழைக்கிறது
சேர்ந்து வந்த பாதை
சீக்கிரம் முடிகிறது
பாதைகள் முடிந்தாலும்
நம் பயணங்கள் முடிவதில்லை
மழை மேகம் மறைந்தே போகும்
இலையுதிர் காலம் இது
பிரிவோம் சந்திப்போம் - நாம்
பிரிவோம் சந்திப்போம்
எங்கே இனி எங்கே
என்றே கண்கள் தேடும்
நினைவெல்லாம் வலி பேசும்
பிரிவோம் சந்திப்போம் - நாம்
பிரிவோம் சந்திப்போம்
————————————————————————————————————
தூக்கம் தொலைத்த இரவுகள் நித்தம்
காற்றில் மிதக்கும் செல்போன் முத்தம்
தேர்வின் போதே புத்தகம் பக்கம்
சொர்க்கம் இதுவல்லவோ
நெஞ்சம் ஏங்குமே இன்னும்
கொஞ்ச நாளுக்காய் விம்மும்
சுகமாய் நமக்குள் நடந்திட்ட யுத்தம்
விண்ணை பிளக்கும் நாமிட்ட சத்தம்
துன்பம் எரிக்கும் நட்பின் வெப்பம்
நினைவினில் நின்றிடுமே
விழி மூடிடும் இமை
அரங்கேற்றிடும் இதை
நினைவோடு இருப்போமே
உயிரோடு கலப்போமே ..
————————————————————————–
Tags: :-), Chemical Engg, friends, memories, NITT, Senti, Tamil Mandram

10 comments so far
Leave a reply