சில விஷயங்கள் அமையப் பெற்றதற்காக சில சமயங்களில் மட்டுமே கர்வங் கொள்ள முடியும் . அது போன்ற ஒரு தருணம் தான் இதுவும் . சில காலங்கள் பார்த்துப் பார்த்து ரசித்து விட்டு , முதல் நாள் வகுப்பில் நுழையும் ஒரு குழந்தையின் தயக்கத்துடனும் , காதலைச் சொல்லப் போகும் தவிப்புடனும்  சில கவிதைகளுடன் நேற்று தான் பதிவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது . மழையில்லாத ஒரு  மாலை நேரத்து  மின்னல் போல்  சட்டென்று கடந்து போய்விட்டது ஒரு வருடம் . எத்தனை உறவுகள் , எத்தனை பரிவுகள் , எத்தனை உரிமையான செல்லக் குட்டுகள் …

 

உங்கள் அத்தனை அன்புக்கும் மௌனங்கள் மட்டுமே பதிலாய் என்னிடம் .. இந்த வாரம் மேகத்தில் மிதப்பதற்கு என எனக்கு எழுதி வைக்கப் பட்டிருக்கிறது போலும் . திங்களன்று உயிரோடை முடிவுகள் .. நேற்று சுவாரசிய தளத்திற்கான தேர்வு .. அதுவும் நான் வியந்து உள்வாங்கும் கவிதைகளின் சொந்தக்காரர் பிரவின்ஸ்காவிடமிருந்து ..

 

 

 

 

 

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா .. !  உங்கள் அறிமுகத்தை நியாப்படுத்த முயன்ற வரை முயற்சி செய்கிறேன் .. :-)  

 

 

ஏனென்று தெரியவில்லை (அட நெஜமா பா ! ) என் கவிதைகள் காதலைத் தழுவிக்கொண்டோ இல்லை அதன் நிழலின் பின் ஒளிந்து கொண்டோ தான் எட்டிப்பார்த்திருக்கின்றன . இதுவரையிலும்…..  அவள் சில அழகிய குறிப்புகளும் , கனவில் வருபவளிலும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ !   சேரல் சொன்னது போல் அழகான விடுமுறை தரலாமோ காதல் கவிதைகளுக்கு ?  தரலாம் :-)

 

எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட  , ஆரம்ப நாட்களைப் போல ….

 

பரிட்சார்த்தமான சில கதை முயற்சிகளையும் , காதலல்லாத கவிதைகளையும் தர முயற்சி  செய்கிறேன் . உங்கள் அன்பும் , சில செல்லக் கண்டிப்புகளும் எப்பொழுதும் என்னுடன் என்ற நம்பிக்கையுடன் ..

 

 

நன்றி பிரவின்ஸ்கா !

 

நன்றி நண்பர்களே !

 

 

 

ப்ரியமுடன் ,

ரெஜோ

 

 

பின்குறிப்பு :

 

           இந்த விருதை இன்னும் ஆறு பேருக்குத் தர வேண்டும் . கிட்டத் தட்ட என் பிரியமானவர்கள்  விரும்பும் தளங்கள்,   அனைவரும் அனைத்தும் பரிந்துரை செய்யப் பட்டுவிட்டதால்  புதியதாக தளம் ஆரம்பித்திருக்கும் , ஆரம்பிக்கப் போகும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளோடு முடித்துக் கொள்கிறேன் .

Tags:

This entry was posted on Saturday, July 25th, 2009 at 10:18 pm and is filed under சுவடுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments so far

Revathi
 1 

புதிய முயற்சிகளுக்கும் ,விருதுக்கும் வாழ்ததுக்கள் சீனி :-)

July 26th, 2009 at 9:10 pm
Revathi
 2 

//எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட ..//

நாட்டாமை, தீர்ப்ப மாத்தி சொல்லுங்க ………….
குறைந்த பட்சம் ஒரு குறுங்கவிதையாவது ………சொல்லாட்டி காதல் பாவமில்லயா?

July 26th, 2009 at 9:11 pm
Rejovasan
 3 

வாழ்த்துகளுக்கு நன்றி ரேவதி :-)

கொஞ்ச நாள் தானே .. வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா !!!

July 26th, 2009 at 10:47 pm
 4 

வாழ்த்துகள் தம்பி :)

//வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா !!!// :)

பாலா தன் கணக்கை என் வலைப்பூவில் துவக்கி விட்டான். நீ எப்போது?

-ப்ரியமுடன்
சேரல்

July 27th, 2009 at 3:35 pm
 5 

வாழ்த்துக்கள் நண்பா. பிரவின்ஸ்காவிடமிருந்து விருதா!! சூப்பர்

July 28th, 2009 at 8:17 am
Rejovasan
 6 

நன்றி நண்பா :-)

July 28th, 2009 at 8:29 am
Ilavarasan
 7 

டேய் ரிஜோ நீ என்ன பெருசா சாதிசுட்ட காதல் கவிதைல .. உடனே நிறுத்த அப்படி என்ன அவசரம்… உன்னோட எழுத்துக்கள்ல ஒரு சோகம் இருக்கும் … சோனியா அகர்வால் முகம் மாதிரி …. அது தான் மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும் … நிறுத்திவிடாதே …..

// வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா // அடுத்த வரி என்னவென்று தெரியும் தானே ….?

July 29th, 2009 at 12:22 am
Rejovasan
 8 

சாதிக்க எல்லாம் இல்ல மாம்ஸ் … படிக்கறவங்களுக்கு சலிச்சிடக் கூடாதில்ல … ;-)

சோகம் … சோனியா அகர்வால் .. ஆஹா என்ன அருமையான உவமை :-)

// // வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா // அடுத்த வரி என்னவென்று தெரியும் தானே ….? //

காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா … காத்திருப்பதில் தவறா இளா ??

July 29th, 2009 at 10:33 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment