ஒருவேளை வெறும் சம்பிரதாயமாக  போய்விடுமோ என எண்ணி தான் இரண்டு நாட்களாக இதைப் பதிவிடாமல் இருந்தேன் . இருந்தும் மனதில் இருப்பதைச் சொல்லித் தானே ஆக  வேண்டும் .

 

உயிரோடை முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகின்றன . வெகு நாட்கள் கழித்து வெற்றி தோல்வி பற்றி யோசிக்க வைத்த ஒன்று இப்போட்டி .

 

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது வடகரை வேலனுக்கும் , வெயிலானுக்கும் தான் . எனது தளத்தினை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி , அவ்வப்பொழுது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து , தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்குபெறத் தூண்டியவர்கள் அவர்கள் தான் . உங்களுக்கு என்றுமே நான் கடமைப் பட்டிருக்கிறேன் .

 

 

சேரல் .  எனது பிரியத்திற்குரிய அண்ணா . கல்லூரியில் நாங்கள் எல்லாம் அ  ன்னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கையில் , மரபை மீறிய கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தவர் . சேரல் பற்றி சொல்லி விட்டு ப்ரவின்ஸ்கா பற்றி சொல்லாவிட்டால் எப்படி :-) இவர்கள் இருவரும் எனது தளத்தைப் படிக்கிறார்கள் என்பதே நான் வானில் பறக்கப் போதுமானது. ஏதாவது பின்னூட்டம் வந்தால் சொல்லவும் வேண்டுமா …

 

யாரையாவது  பார்த்து  என்னைப் போலவே பேசுகிறானே , யோசிக்கிறான் என்று தோன்றியதுண்டா ? அப்படி எனக்குத் தோன்றிய அன்பர் தான் சத்யமணி . இன்னும் வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவர் அழகான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . வாழ்த்துகள் தோழர் :-)

 

எனது கவிதைகளை ஏதாவது ஒன்று உருப்படி என்பதை அனுஜன்யாவும் , கே.ரவிஷங்கரும் நன்று என்று ஒரு வார்த்தை சொன்னாலே வகைப் படுத்திக் கொள்வேன் .:-)

 

மச்சான் ரிஜோ என்று செல்லமாக குட்டு வைக்கும் இளவரசன் , சார் சும்மா கவிதைன்னு இப்படி எல்லாம் எழுதக் கூடாது என்று கேள்விகளாகக் கேட்கும் அப்பாஸ் , நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறெதுவும் இதுவரை சொல்லாத ரேவதி எல்லாருமே என் சக பயணிகள் .

 

எல்லாவற்றுக்கும் மேல் எப்பொழுதும் என்ன எழுதினாலும் முதலில் படித்து உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்கள்  என் பிரியத்திற்குரிய நண்பன் பாலாவும் , பிரிய தங்கை சத்யாவும் . அவர்களுக்கு நன்றிகள் எல்லாம் கிடையாது , எப்பொழுதும் என் எழுத்துகளை முதலில் படிக்கும் தண்டனை மட்டுமே .

 

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக்கும் காரணமான உயிரோடை  லாவண்யா அவர்களுக்கும் , போட்டி நடுவர்களுக்கும் நன்றிகளும் , அவர்களின் இந்த சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும் :-) .

 

போட்டியில் வெற்றி பெற்ற , மற்றும் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-)  

 

 

மேலும் எப்பொழுதும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களுக்கும் , பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளும் அன்புகளும் :-)  

 

ப்ரியமுடன் ,

ரெஜோ 

Tags:

This entry was posted on Thursday, July 23rd, 2009 at 8:36 am and is filed under சுவடுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments so far

 1 

அன்புத் தம்பி,

எனக்கு இப்படி ஓர் அறிமுகமா? என்ன சொல்லட்டும்? இப்போதைக்கு வாழ்த்து மட்டும். அதை ஏற்கனவே பலமுறை உன் தளத்திலும், நம் தொலைபேசி உரையாடல்களிலும் சொல்லியாகி விட்டது. எழுத்துக்களை இன்னும் வசமாகப் பிடித்துக்கொள். வாழ்க்கையை தொலைதூரம் நின்று ரசி. காதல் கவிதைகளுக்குச் செல்லமாகக் கொஞ்சம் விடுமுறை தந்துவிட்டு வேறு பாதையிலும் உன் கவிதைகள் பயணிக்கட்டும்.

அறிவுரை அல்ல. அண்ணன் என்று சொல்லி விட்டாய் அல்லவா? (உண்மைதானே :) ) அந்த அக்கறை.

உன்னோடு பயணிக்கும் ஒரு சக பயணி,

-ப்ரியமுடன்
சேரல்

July 23rd, 2009 at 5:11 pm
Rejovasan
 2 

// காதல் கவிதைகளுக்குச் செல்லமாகக் கொஞ்சம் விடுமுறை தந்துவிட்டு வேறு பாதையிலும் உன் கவிதைகள் பயணிக்கட்டும். //

நிச்சயமாக அண்ணா :-) கொஞ்ச நாளைக்கு ஏற்கனவே எழுதியவைகளையே பதிவிடப் போகிறேன் . இந்த இடைவெளி இன்னும் நிறைய படிப்பதற்கும் என்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் நேரம் தரட்டும் …

July 23rd, 2009 at 9:59 pm
Pravinska
 3 

வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

July 23rd, 2009 at 11:26 pm
Revathi
 4 

பட்டாம்பூச்சிகளை வாசிக்கத் தரும இந்த பயணம் எனக்கும் பிடிச்சிருக்கு சீனி.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ….. :-)

July 24th, 2009 at 12:08 am
Rejovasan
 5 

நன்றி பிரவின்ஸ்கா அண்ணா :-)

நன்றி ரேவதி :-)

July 24th, 2009 at 6:32 am
 6 

உங்கள் வெற்றிப் பயணங்கள் தொடரட்டும் சீனி!

July 24th, 2009 at 8:07 pm
Rejovasan
 7 

நன்றி வெயிலான் :-)

July 24th, 2009 at 10:36 pm
sathyamani
 8 

மனம் நெகிழ்ந்து போய் உள்ளேன் தோழா…நிழல்கள் எப்போதும் வண்ணமாக இருந்தது இல்லை ஆனால் பட்டாம்பூச்சியின் நிழலில் நான் இருப்பதால் வண்ணமகிறேன் என நினைக்கிறன் நன்றி தோழா ….

July 24th, 2009 at 10:38 pm
Rejovasan
 9 

இனிதே துவங்கட்டும் உங்கள் தளம் .. பின்பு தெரியும் நிழலா இல்லை வானவில் போர்த்திய இன்னொரு பட்டாம்பூச்சியா என்று :-) காத்திருக்கிறேன் தோழரே !

July 24th, 2009 at 10:40 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment