கனவில் வருபவள் 5
என் விரல்கள் பேசிய கவிதைகளே
இன்னும் சந்திக்க வில்லை
முட்டாள் உதடுகள்
அவைகளும் பேச வேண்டுமாம்
———————————————————-
எங்கே விழுந்தாலும்
தாங்கிப் பிடிக்க வந்துவிடுகிறதுன் பிம்பம்
மலராடைகளில் உதிரம் பட்டுவிடாமல்
பார்த்துக்கொள்
———————————————————–
எக்காலத்திலும் என் கிளைகளுக்கு
இலையுதிர் காலம் தான்
இலைகளை ஒட்ட வைக்கவோ
பூ பூக்கச் செய்யவோ
நீ தான் வர வேண்டும்
—————————————————-
கனவிலிருந்து கலைந்து
போனபின் எல்லாம்
கவிதையாய் வந்து சேர்கிறாய்
மீண்டும் என்னிடமே …
—————————————————–
காதலே …
என்ன ??
என் காதலை வடிக்க
உலகிலேயே உயர்ந்த வண்ண
மை வேண்டும்
உன்னிடமே உள்ளதது
உன் கண்ணீர் தானது …
அன்றிலிருந்து தான்
நனையத் துவங்கியதென் காகிதம்
நிறமில்லாமல் …
———————————————————–
இரவு முழுவதும்
உருகிக்கொண்டிருந்தேன்
விடிந்ததும் அணைத்துச் சென்றாய்
புகைந்து கொண்டிருக்கிறேன் ..
———————————————————————-
Tags: all about her, dream, Love poems

9 comments so far
Leave a reply