எல்லா நதியின் பயணமும்

கடல் தேடியே

நதியாகிறேன் நானும் …

————————————————————-

உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்

உனக்குத் தெரியாமல்

என்னை நினைப்பதேயில்லை நீ

என்னைத் தெரியாததால் …

—————————————————————–

உயிர் தேடி வேராய்

மண்ணுக்குள்ளே நான்

நீயோ சிரித்துக் கொண்டு பூவாய்

கிளையின் மேலே ..

———————————————————

வேதனை

தலையணையும் நீயாக

வேண்டும்

தலையணையாய் நீயாக …

——————————————————-

என்று உனது நிழல் துணை கொண்டு

உன்னைத் தேடத் துவங்கினேனோ

அன்று தான் தொலைந்து போனது

எனக்கான அடையாளங்கள்.

——————————————————

நேற்றுப் பிறந்த குழந்தையாய்

எந்நேரமும் சிணுங்கிக்கொண்டு

என் இதயம்

மார்போடணைத்து அமைதிப்படுத்த

உன்னால் மட்டுமே முடியும்.

—————————————————–

Tags: ,

This entry was posted on Sunday, May 17th, 2009 at 2:17 pm and is filed under கனவில் வருபவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments so far

Revathi
 1 

seeni,
Idhayathukul parakum vitthai un pattampoochikaluku Nanrakavey therinthu irukirathu…..

Kaathalai ippadi kavithayalaye adithirukiraaye…kaathal paavam summa vidathu… :)

May 17th, 2009 at 5:42 pm
Rejovasan
 2 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரேவதி :-)

// Kaathalai ippadi kavithayalaye adithirukiraaye…kaathal paavam summa vidathu… :) //

என்னை மேலும் மேலும் பாவம் செய்யச் செய்வதே அது தான் … பார்க்கலாம் .. ஏதாவது பரிகாரம் நிச்சயம் இருக்கும் ;-)

May 17th, 2009 at 10:02 pm
Revathi
 3 

Un kavithaikalukku kannam irunthiruntha kandippa thirustipottu vachiruppen…ovvonnum avlo alagu ….

Padichukitey irukken….Mudikka mudiyala …..Unna ninaicha piramippa irukku………Vaalthukkal :)

May 17th, 2009 at 10:28 pm
Rejovasan
 4 

:-) :-) :-)

May 17th, 2009 at 11:32 pm
கவிக்குயில்
 5 

“உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்குத் தெரியாமல்
என்னை நினைப்பதேயில்லை நீ
என்னைத் தெரியாததால் …”—- ஒரு சுய பச்சாதாபம் வருகிறது அந்த பையன் மேல்.

கடலை தேடும் நதிகள் தான் அதிகம்.கடல் எண்ணிக்கை என்னவோ குறைவு தான்.:)

May 29th, 2009 at 7:25 pm
Rejovasan
 6 

சுய பச்சாதாபம் ???

இனி இது போன்ற கவிதைகளைத் தவிர்க்க முயலுகிறேன் ..

June 1st, 2009 at 4:42 pm
 7 

சிறப்பு.

–கார்த்திக்.

August 27th, 2009 at 3:14 pm
Rejovasan
 8 

நன்றி கார்த்திக் :-)

August 28th, 2009 at 11:41 am
Hari
 9 

வேதனை
தலையணையும் நீயாக
வேண்டும்
தலையணையாய் நீயாக

-Iru murai padippavargalukkaagave ezhudhappattadhu pol miga azhagaai vadikkappatta pagudhi…. Miga azhagu…

March 13th, 2011 at 8:17 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment