பிறக்கும் போதே

ஒட்டவைக்கப்பட்டிருந்தன

உன் உதட்டில் என் புன்னகைகளும்

என் கண்களில் உன் கண்ணீரும் …

 

—————————————————

 

என்னிரவில் நட்சத்திரங்களாய்

உன் நினைவுகள்

நிலவுக்காகத்தான் காத்திருக்கிறேன்

இத்தனை நாட்களாய்…

 

————————————————

 

உன்னால் நான் தொலைத்த

உச்சகட்ட ஒன்று

நான் தான்..

 

—————————————————

 

ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்

கலைந்து போன கனவின் மீதமாய்

பூக்கிறதோர் புன்னகை

என் உதட்டில் முட்களோடு

 

———————————————————-

 

காதலில் என்றுமே கண்ணீர் கிடையாது

கண்கள் தாண்டி வழியும்

எல்லாத் துளிகளும்

கீழே விழுகின்றன கவிதைகளாகவே..

 

————————————————————

 

எல்லாப் பேருந்துகளிலும்

என் வீட்டு முகவரியே

எழுதப் பட்டிருக்கிறது

உனக்காகத்தான் காத்திருக்கிறேன்

நிழற்குடையின் கீழேயே…

————————————————————

Tags:

This entry was posted on Wednesday, May 13th, 2009 at 12:56 pm and is filed under கனவில் வருபவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments so far

 1 

:)

May 13th, 2009 at 1:50 pm
Abbas
 2 

//எல்லாப் பேருந்துகளிலும்
என் வீட்டு முகவரியே
எழுதப் பட்டிருக்கிறது
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
நிழற்குடையின் கீழேயே…//

அவங்களுக்கு உங்க வீட்டு முகவரிய குடுத்துட்டு
நிழற்குடை கீழ எதுக்கு காத்திருக்கணும்
வீட்டுலையே காத்திருக்கலாமே :) )

May 13th, 2009 at 2:37 pm
Abbas
 3 

//பிறக்கும் போதே
ஒட்டவைக்கப்பட்டிருந்தன
உன் உதட்டில் என் புன்னகைகளும்
என் கண்களில் உன் கண்ணீரும் …//

அவங்க இதயத்துல உங்க இதயத்த
ஒட்டி இருக்கலாம்
கண்ணீர தவிர்திருக்கலாம்

May 13th, 2009 at 2:58 pm
Abbas
 4 

உன்னால் நான் தொலைத்த
உச்சகட்ட ஒன்று
நான் தான்…

நீங்க உங்களை தொலைத்து
பல கவிதைகள் பிறந்தது
எங்களுக்கு நன்றுதானே

May 13th, 2009 at 3:01 pm
Rejovasan
 5 

வருக அப்பாஸ் :-) தங்களது கருத்துக்கு மிக்க நன்றி ..

// அவங்களுக்கு உங்க வீட்டு முகவரிய குடுத்துட்டு
நிழற்குடை கீழ எதுக்கு காத்திருக்கணும்
வீட்டுலையே காத்திருக்கலாமே :) ) //

முகவரியா ? அப்போ நீங்க கண்டிப்பா முகவரி தொலைத்த கடிதங்கள் படிக்கணும் ;-)

// நீங்க உங்களை தொலைத்து
பல கவிதைகள் பிறந்தது
எங்களுக்கு நன்றுதானே //

அதையே தான் எனக்கும் சொல்லிட்டு இருக்கேன் ;-)

// அவங்க இதயத்துல உங்க இதயத்த
ஒட்டி இருக்கலாம்
கண்ணீர தவிர்திருக்கலாம் //

உலகம் என்ன இதயமில்லாதவன்னு சொல்லாதா ??!!:-)

May 13th, 2009 at 8:08 pm
Rejovasan
 6 

அப்பாஸ் , உங்களோட Test comment அ எடுத்திட்டேன் …

May 13th, 2009 at 8:09 pm
Rejovasan
 7 

நல்லா சிரி பாலா ;-)

May 13th, 2009 at 8:09 pm
 8 

:)

May 13th, 2009 at 10:36 pm
Rejovasan
 9 

U Too சேரல் ?? ;-)

May 13th, 2009 at 10:48 pm
sathya
 10 

:) ;)

May 14th, 2009 at 4:58 pm
கவிக்குயில்
 11 

காதலியை விட காதலை நேசிப்பவர்களுக்கான வரிகள் இவை.

“காதலில் என்றுமே கண்ணீர் கிடையாது
கண்கள் தாண்டி வழியும்
எல்லாத் துளிகளும்
கீழே விழுகின்றன கவிதைகளாகவே..”

காதல் ஒரு இன்ப வலி தான்.முட்களோடு புன்னகை.அழகான வரிகள்.

May 29th, 2009 at 7:16 pm
Rejovasan
 12 

:-)

June 1st, 2009 at 4:43 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment