காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

 

உயிரோடு உறைந்து போகவும்

துணிந்த பின் தான்

உன் பாதச்சுவடுகள்

போன பாதையைத் தேர்வு செய்தேன் ..

 

—————————————————————

 

என்றுமே பின் தொடர்வதில்லை

உன்னை நான்

உன்னோடு சேர்ந்து நடக்கவே

காத்திருக்கிறேன்

 

——————————————————————

 

 

என் கண்களில்

நீ வரா நாட்களில் எல்லாம்

அதிகம் பார்கின்றேன்

வானில் மின்னல்கள்…

 

——————————————————————–

 

காற்றில்

உன் சுவாசம் மட்டும்

பிரித்தெடுத்துச் சுவாசிப்பதாகவே

நினைத்துக் கொண்டிருக்கிறேன்

இன்னமும் …

 

——————————————————————-

 

ஏதோ ஒரு திங்களன்று

உன்னோடு பேசினேன் என்பதற்காக

எல்லாத் திங்கள்களிலும்

பேசிக் கொண்டிருக்கிறேன்

அதே வார்த்தைகளை

நீ இல்லாமலேயே…

 

 

———————————————————————

 

-தொடரும்

Tags: , ,

This entry was posted on Sunday, April 26th, 2009 at 11:58 pm and is filed under கனவில் வருபவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments so far

 1 

என்ன தம்பி! காதலாகிக் கசிந்துருகுறீங்க?

//காதல் கவிதைகள் அழகானவை
எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன
யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ
அவர்களைத் தவிர .//

//ஏதோ ஒரு திங்களன்று
உன்னோடு பேசினேன் என்பதற்காக
எல்லாத் திங்கள்களிலும்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அதே வார்த்தைகளை
நீ இல்லாமலேயே…
//

இந்த வரிகளை நானும் ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

April 27th, 2009 at 7:51 am
Rejovasan
 2 

நன்றி சேரல் :-) முதல் கவிதையை ஊர்ஜியப்படுத்தியதற்கு …

April 27th, 2009 at 7:53 am
Phoenix
 3 

Brilliant !!!!!!!!!!!

April 27th, 2009 at 12:58 pm
 4 

:-) ம்ம்..
//
காதல் கவிதைகள் அழகானவை
//

April 27th, 2009 at 1:40 pm
Rejovasan
 5 

ம்ம்…ம்ம்

April 28th, 2009 at 12:44 am
Rejovasan
 6 

Thanks Miss Phoenix :-)

April 28th, 2009 at 12:45 am
sathyamani
 7 

தோழருக்கு வணக்கம்…காதல் வயப்பட்டவர்களீன் மனது..பிரதிபலிக்கிறது கவிதைகளீல் வாழ்த்துகள்

April 29th, 2009 at 11:11 am
Rejovasan
 8 

வணக்கம் தோழரே ! வருக :-)
வாழ்த்துகளுக்கு நன்றி .. கவிதைகளுக்கானதாக அதை நான் எடுத்துக் கொள்கிறேன் .

April 29th, 2009 at 1:20 pm
கவிக்குயில்
 9 

கவிதை அருமை.காற்றில் உன் சுவாசம்,ஏதோ ஒரு திங்களன்று என தொடங்கும் வரிகள் இரண்டும் நல்ல கற்பனை.:)

May 29th, 2009 at 7:09 pm
Rejovasan
 10 

:-)

June 1st, 2009 at 4:43 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment