
வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..
தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..
Read the rest of this entry »
Tags: god's office, poem

இருப்பிடம் குறித்த அடையாளங்கள்
ஏதுமற்ற அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
வேர்களின்றி
இலைகள் உதிரும் மரம் …
இச்சை போல்
உதிர்ந்து கொள்ளும் இலைகள்
காற்றில்லா பிரபஞ்சத்தில்
நீந்தி வருகின்றன
வாலில்லா பட்டங்களென ..
Read the rest of this entry »
Tags: falling leaf, poem

இன்னும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள் எனக்கு . தூக்கம் கூட கலையாமல் , அழ அழ என்னையும் என் தம்பியையும் லாரியில் உள்ள பொருட்களோடு ஏற்றி ,ஐந்து வருடங்களாக அழகான என் பால்யத்தை கழித்த ஊரை விட்டு விட்டு , இன்னமும்
என் நெற்றியில் நிலைத்து நின்று விட்ட தழும்புகள் தந்த திண்ணையை விட்டு விட்டு , வீட்டு மாற்றி புது ஊருக்கு எங்களை அப்பா அழைத்துச் சென்ற நாள் . வாடகை வீட்டில் குடியிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த வலியும் , வேதனை உணர்வும் .வரும் வழி முழுதும் அழுது அடித்த வாடைக்காற்றில் அது காய்ந்தும் போய் வெறும் கேவலாக
நின்று விட்டிருந்தது .அன்று தான் நிகழ்ந்தது அவனுடனான என் .. எங்கள் முதல் சந்திப்பு .
அவனாகவே வந்து பொருட்களை இறக்கி வைக்க உதவி செய்தான் . எந்தப் பொருகளை எங்கே வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான் . ரைட் போலாம் போ போலாம் போ என லாரியை ரிவர்சில் போக உதவி செய்தான் . அப்பா பணம் தந்ததற்கு ,
இப்பொழுது வேண்டாம் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு , என் தம்பியின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டுச் சென்று விட்டான் .
அப்பொழுது எனக்கு பத்து வயது என்றாலும் , யாராவது வீட்டு முகவரி எழுதச் சொன்னால் , தெரு பெயரை எழுதி விட்டு ,வீட்டு எண்ணை யோசித்து திரு திருவென முழிக்கும் அளவிற்கு தான் நியாபக சக்தி எனக்கு . என் புதிய பள்ளியின் நேர்முகத் தேர்வில் கூட அப்பாவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னதற்கு யோசித்து யோசித்து கடைசியாக ரெங்காவுக்கு பதில் ரிங்கா என்று தான் எழுதியிருந்தேன் . ஆனாலும் ” பயல் இன்னமும் ரைம்சை மறக்கலை பாரேன்” என்று வெரி குட் சொல்லி சேர்த்துக் கொண்டார்கள் . இருந்தும் இன்னமும் அவன் முகம் மட்டும் தெளிவாக மனதில் இருக்கிறது அழியாமல் , ஒரு பிடித்த கனவைப் போல .
Read the rest of this entry »
Tags: Story, train

அன்பு நண்பர்களுக்கு..,
வணக்கம். இம்மண்ணின் கலைகள் மீதும் , கலைஞர்களின் மீதும் கொண்ட நிஜமான அக்கறையோடும் , கடந்த வருடம் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதும் , பிற உதவிகள் செய்தும் , விழா எடுத்ததும், உங்களுக்குக் நினைவிருக்கும்.குளுகுளு அறைக்குள் அமர்ந்துகொண்டு பல்லாண்டு கால திட்டமாக எழுத்து வடிவிலேயே வைத்திருக்காமல் கலைஞர்களின் இடத்திற்கே தேடி சென்று இயன்றவரை உதவி செய்வதற்கான சிறு முயற்சிகள்தான் இவை.
இந்த முயற்சிகளும் ,நிகழ்ச்சிகளும் தொய்வின்றி ஒவ்வொரு வருடமும் தொடரவேண்டும் என்பதுதான் உங்களைப்போலவே எங்களின் விருப்பமும். வருகிற ஜனவரி 24ஆம் தேதி கடந்த வருடம் போலவே இந்த முறையும் சேலம் மாவட்டத்தில் ஏர்வாடியில் கூத்து கலைஞ்ர்களுக்கு பாராடு விழா நடத்த ஏர்பாடு செய்யப்பட்டிருப்பதோடு..”மணல் வீடு”இதழ் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப்போட்டியின் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அத்தோடு தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளான சா.தமிழ்செல்வன், பேரா.மு.இராமசாமி, சிவகாமி.ஐ.ஏ.எஸ் , பாமரன் ,நாஞ்சில்நாடன், ஆதவன்தீட்சண்யா இவர்களோடு சேர்த்து இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
மக்கள் கலைகள் யாவும் மக்களாலேயே வளர்க்கப்படுவதற்கான ஒரு சூழல் ஏற்படுவதுதான் ஆரோக்கியமான் விஷயம். கூத்தினை மட்டுமே வாழ்வாக நினைத்து தங்களை அர்ப்பணித்திருக்கும் இக்கலைஞர்களை கௌரவிக்கும் வாய்ப்பாக உங்கள் பங்களிப்பை செய்ய விரும்பினால். நீங்கள் அனுப்பும் தொகையினை..”வி.சண்முகபிரியன்..a/c no:611901517766 என்ற ICICI வங்கி கணக்கிற்கு சேலம் செவ்வாபேட் கிளையில் மாற்றுவதற்கு ஏற்றவாறு அனுப்பவும்.
மிகுந்த அன்புடன்
மு.ஹரிகிருஷ்ணன்
லக்ஷ்மிசரவணகுமார்
மற்றும்..
மணல்வீடு இதழ் குழு.,
களரி தெருகூத்து பயிற்சி பட்டறை
டிஸ்கி
மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் ,
மு.ஹரிகிருஷ்ணன் - 9894605371,04298264018
லக்ஷ்மிசரவணகுமார் - 9790577460
தொடர்பு கொள்ளுங்கள் .
மேலும் எனது தளத்திற்கு வருகை தருபவர்கள் மிகக் குறைவு . முடிந்த அளவு இந்த விழா பற்றிய விபரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் கூட கலைக்காக வாழ்வையே அர்பணித்திருக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் இவ்விழாவிற்கு நாம் செய்யும் அணில் முயற்சிதான் . நன்றி.
Tags: Dramaa, festival, Kooththu