
ரொம்ப நாளா பாக்கணும் னு நெனச்ச படம். எனக்கு நேத்து தான் WAL-E படம் பார்க்க chance கெடச்சது.உணர்வுப்பூர்வமான படம் . சுற்றுச்சூழல் , இரும்பு கழிவு (இன்னா ஸ்பைடி இப்டி ஆய்ட்ட ) யாருக்கு வேணும் அதெல்லாம் (அதான !)
ஆரம்ப காட்சில இருந்தே ஒரு கரப்பான் பூச்சியோட (இதை நான் வேண்டுமென்ற உபயோகிக்கவில்லை கணம் கோர்ட்டார் அவர்களே !!!), உலகமே அழிஞ்சாலும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ன்னு சொல்ற அளவுல யாருமே இல்லாத ஊர்ல அதோட வேலைய பார்த்திட்டு ,ஜாலியா , தனியா (??!!) சுத்தற நம்ம வால்-ஈ . டான்ஸ் பார்த்து ரெண்டு கைய்யையும் கோர்த்துட்டு பீல் உடறது ஆகட்டும் , அந்த பொண்ண பார்த்துட்டு கண்ணு சொருகி நிக்கறது ஆகட்டும் , அவள இம்ப்ரெஸ் பண்ண அது அடிக்கற லூட்டி ஆகட்டும் ..அடடா அடடா (என் இனமடா நீ !!
)
Read the rest of this entry »
Tags: சினிமா, WAAL-E

கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .
கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .
Read the rest of this entry »
Tags: சினிமா, சூர்யா, வாரணம் ஆயிரம்

வேலை பிடிக்காத காலையொன்றில்
வீடு ஒதுக்குகையில்
பழைய புத்தகங்களுக்கிடையில்
பார்க்கக் கிடைக்கும் கையெழுத்துகளில்
Read the rest of this entry »
Tags: ஆதலினால் கவிதை ...
உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும்
பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …
தூக்கம் மறந்து
விழிகள் திறந்து
எரியும் கண்களில் விரியும்
கனவுகள் கலைந்த பின்
விட்டுச்சென்ற கால்சுவடுகளை
அலைகள் வந்து திருடிப் போகும் சுகம்
நெஞ்சின் அடுக்குகளில் இருந்து
நினைவுகள் வருடப் படுகையில் …
Read the rest of this entry »
Tags: ஆதலினால் கவிதை ...