கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .

 

கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .

 

வெண்மதி வெண்மதி – மின்னலே

ஒன்ற இரண்டா – காக்க காக்க

பார்த்த முதல் நாளே – வேட்டையாடு விளையாடு (இந்தப் பாடல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது .. இருந்தாலும் இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பது தனி கதை.. அது இன்னொரு சமயம் )

காதல் கொஞ்சம் – பச்சை கிளி முத்துச் சரம்

 

சத்யம் ஊத்திக்கொண்ட பாடல்களால் (நெஜமாகவே நீங்க தானா ஹாரிஸ் ) ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலே பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் . கேட்ட முதல் பாடல் அஞ்சலை கானா பாட்டு . கடுப்பாகிவிட்டது . போச்சுடா இதுவும் ஊத்தலா என சலிப்புடன் தான்  மற்ற பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் .

 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை —

                            சரி அப்பறம்

நீருக்குள் மூழ்கிடும் தாமரை —

                           யாருகிட்ட ஓட்டறீங்க .. தாமரை எப்டியா தண்ணிக்குள்ள மூழ்கும் .. ரைமிங் கு என்ன வேணும் னா எழுதுவீங்களா

 

சட்டென்று மாறுது வானிலை

 

        அடுத்த வரி தான் எழுந்து உட்கார வைத்தது .

பெண்ணே உன் மேல் பிழை .

 

           அழகான ஒரு குறுங்கவிதை . பாடல் முழுக்க . திருவள்ளுவராவது காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ன்னு தான்  சொன்னாரு . தாமரை கொஞ்சம் மேல போய் தாமரை (பார்ரா மறுபடியும் தாமரை !!)  நீருக்குள்ளே   மூழ்கிடுச்சுன்னு சொல்றாங்க . அது என்டோட பிழை இல்ல .. உன்னோடது பெண்ணே ..

 

அஞ்சலை , ஏத்தி ஏத்தி எல்லாத்தையும் தூக்கி போட்டு நெஞ்சுக்குள் பெய்திடும் , நீயின்றி நான் இல்லை , அனல் மேல பனி துளி , எல்லாமே அழகான குட்டி குட்டி கவிதைகளோட தொகுப்பு . கண்டிப்பா கவிதைக்காக ஹாரிஸ் நெறைய காம்ப்ரமைஸ் பண்ணிருக்காரு .(கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகமில்லா  )    .

 

அருமையான குரலில் , தெளிவான உச்சரிப்புடன் ஹரிஹரன் .. உடன் தேவன் .. அழகான கவிதை வரிகள் .. அதை சிதைக்காத மெல்லிய ஆனால் உயிர் தொடும் இசை   , ஹம்மிங் . கோரஸ் என எல்லாமே ஒரு perfect team .  

 

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் (உண்மையில் எல்லாமே )      

 

என்னோடு வா வீடு வரைக்கும்

என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

 

                எவ்வளவு ரசனையான வரிகள் . அந்த வீடு எப்டி இருக்கும் ன்னு பார்க்க காத்து தான் இருக்கேன் . கௌதமும் அவரோட பங்கை சரியா செஞ்சிருந்தார்னா பாடல் அதிகமுறை எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடும் .

 

அடுத்த வரிகள்

 

காதல் என்னைக் கேட்க வில்லை

கேட்டால் அது காதல் இல்லை

 

            விளக்கம் எதுவும் வேணுமா என்ன ?? ;-)

 

ரெண்டு நாளா ஒரே பாட்ட ஓட விட்டு ஏன்டா கொல்ற என்ற அறை நண்பர்களின் குமுறல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு (ரசனை இல்லாத பாய்ஸ்)  காதில் head phones மாட்டிக் கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேன் .நேற்று மதியம் ஆரம்பித்தது . எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை . ஒவ்வொரு முறையும் எதாவரு ஒரு வரியில் , ஏதாவது ஒரு ஒலியில் நின்று விட்டிருந்தேன் . பாடல் மட்டும் என்னைக் கடந்து போயிருந்தது . அது ஒரு விதமான விளக்க முடியாத உணர்வு .

 

உங்களுக்கு மிகவும் பிடித்தமான பெண்ணுடன் , மாலை மங்கிய நேரத்தில் நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் , நீங்களே எதிர் பாராமல் உங்கள் கைகளை எடுத்து அவள் கோர்த்துக் கொண்டால் ,

 

இல்லை மாடியில் காயும் உடைகளை எடுக்கச் செல்கையில் மழை வந்து ஒரு நொடியில் நனைந்து போனால் ,

 

இல்லை தெருவில் விளையாடும் குழந்தைகள் , வழியில் செல்லும் உங்களை , அங்கிள் விளையாட வர்றீங்களா எனக்கேட்டால் ..

 

 இந்த உணர்வுகளை எல்லாம் விவாரிக்க முடியாதல்லவா ? ஒன்றுக் கொன்று ஒப்புமை தானே சொல்ல முடியும் .

 

பாடலை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே வருகையிலும் பாடல் மட்டும் கூடவே வந்துகொண்டிருந்து . எப்பொழுதும் பார்க்கும் அதே நிலா , எப்பொழுதும் தொடும் அதே காற்று (உன்னைத் தாண்டி போகும் போது வீசும் காற்றின் வீச்சு வேறு ).. ஆனால் நேற்று புது அனுபவமாக இருந்தது.

 

 

வீட்டின் முன்னிருந்த பிள்ளையார் கூட  அழகாய் தெரிந்தார் . அவர் செம்பருத்தியை எடுத்து அவருக்கே கொடுத்தேன் . எல்லாவற்றையும்  தாண்டி கவிதைகளில் தாமரை நிற்கிறார் . அந்தாதி போல அங்கங்கே ஒரு வரியையே உள்ளுக்குள்  வைத்திருக்கும் வார்த்தைகள் . நாமெழுதியிருக்க வேண்டுமே என பொறாமைப்பட வைத்தது .

 

கேட்டுப்  பாருங்கள்.

 

 

இந்த வாரக் குட்டு (சும்மா லுலுவாய்க்கு)

 

      பதிவர் bee’morgan க்கு ..  ஹரிஹரன் குரல் கேட்டுக் கொண்டிருந்த போது , ஏகன் பாடல் கேட்டியா என உசுப்பேத்தி விட்டு , அதை கேட்க வைத்துக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக :-)

Tags: , ,

This entry was posted on Saturday, October 11th, 2008 at 2:44 pm and is filed under கனவுத் தொழிற்சாலை, நான் ரசிகன். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments so far

sathya
 1 

:) me waiting to watch d movie :)

October 11th, 2008 at 3:48 pm
 2 

நான் இப்பாடலுக்கு அடிமையானதுபோல ஆகிவிட்டேன். என்னால் உங்கள மாதிரி கோர்த்து கவிதமாதிரி எழுத தெரியல. அதனால இதுக்கு சூப்பருனு படம் மட்டும் போட்டு ஒரு பதிவு போட்டுட்டேன். ஹிஹி

October 12th, 2008 at 10:18 am
Rejovasan
 3 

வாங்க சுபாஷ் :-)

உங்க தொழில் நுட்பத் தளம் (+ மொக்கை ஹி ஹி ) அருமை .
வருகைக்கு நன்றி

October 12th, 2008 at 1:33 pm
 4 

உள்ளேன் ஐயா. சொல்றதுக்கு எதுவும் மிச்சம் இல்ல. பாட்டு நல்லாருக்கு ங்கறத தவிர.. :)
ஏன்டா, டேய்.. நானா உன்ன ஏகன் பாட்டு கேக்கச் சொன்னேன்.? கேட்டியானு கேட்டதுக்காக நீ போய் கேட்டா, உன் மேல் பிழை.. :)

ரகசியம் பாடலும் நல்லா இருக்கு.. அந்த பெண் குரல், பிடிச்சுருக்கா பிடிக்கலையான்னு சொல்லத்தெரியல.. ஆனா, பிடிக்கற மாதிரி இருக்கு.. ;)

October 13th, 2008 at 1:43 pm
Rejovasan
 5 

ஏன்டா பேச மாட்ட ??

ரகசியம் ??? அது தான் படத்துல இல்லையே ..

October 13th, 2008 at 2:12 pm
chezhian
 6 

what is the meaming of the words in the song

“kanchanai”
“karihai”
btw i heard it “punnagaiyo boganvilla” is it bogamilla or boganvilla?

November 19th, 2008 at 11:39 pm
Rejovasan
 7 

காரிகை என்பது பெண் எனப் பொருள்படும் இன்னொரு சொல் .
காஞ்சனம் என்றால் பொன் . காஞ்சனை பொன் போன்றவள் , பிரகாசமானவள் எனப் பொருள் தரும் .

எனக்கு தெரிந்த விளக்கத்தையே இங்கு தந்துள்ளேன் . தவறெனத் தோன்றினால் திருத்தலாம் .

புன்னகையோ போகம் இல்லா என்று தான் ஹரிஹரன் குரலில் படுகிறது .

வருகைக்கு நன்றி செழியன் :-)

November 20th, 2008 at 12:00 am
chezhian
 8 

how are you guys writing this in tamil fonts. please teach me. i would like to write in tamil but i don’t know how to… should we know tamil typing or should i download a software for it. pls help me

in sanskrit “kanch” could mean shell, sangu, does this mean something like sangu pondra kazhuttahi udayaval?

November 21st, 2008 at 9:08 pm
Rejovasan
 9 

Hi Chezhiyan ,

In sanskrit kanchan means gold .And in the song the word is kanchanai only . So i’m not sure that it means wat u said or not .. may be .

November 21st, 2008 at 11:17 pm
Rejovasan
 10 

இனி தமிழில் தட்டச்சு செய்ய ..

இங்கே சொல்லியிருப்பது நான் பயன்படுத்தும் முறை பற்றி
இதை விட எளிதான முறை இருக்கக் கூடும் .

http://www.google.com/transliterate/indic/tamil

இது தட்டச்சு செயலிக்கான முகவரி .

just type in english and you ll get it in tamil .
for example ,

for typing நான் , type ‘naan’ and hit space , you ll get the word.

just try it . It’s simple.

November 21st, 2008 at 11:21 pm
chezhian
 11 

அன்பரே மிக்க நன்றி. இப்பொழுது நான் தமிழில் நன்றாக எழுத முடிகிறது

உங்கள் விளக்கத்திற்கு நன்றி. தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அவரும் காஞ்சனை என்றால் தங்கம் என்று பொருள் படும் என்றுதான் சொல்கிறார்

செழியன்

November 22nd, 2008 at 6:49 pm
Rejovasan
 12 

my pleasure :-)

November 23rd, 2008 at 8:31 pm
 13 

அருமையா எழுதியிருக்கீங்க!. இங்க (தாமரையின் விளங்கா வரிகள் http://vurathasindanai.blogspot.com/2008/12/blog-post.html) வந்து கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்?

December 12th, 2008 at 12:38 pm
 14 

/*காதல் என்னைக் கேட்க வில்லை
கேட்டால் அது காதல் இல்லை */

இதே பொருளையொட்டி வைரமுத்து,

‘தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை ‘

என்று எழுதியிருக்கிறார். :-)

December 12th, 2008 at 12:42 pm
Rejovasan
 15 

முதல் வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி சாணக்கியன் :-)

முடிந்த அளவு முயற்சி பண்றேன் .

December 13th, 2008 at 7:50 am
Rejovasan
 16 

வைரமுத்துவின் கவிதைகள் புதுக் கவிதை எழுதுபவர்களுக்கு அகராதி போன்றது . இப்பொழுது கவிதை எழுதுபவர்கள் அல்லது எழுத முயல்பவர்கள் யாரும் அந்தத் தாக்கம் இல்லாமல் எழுதுதல் கடினம் என்றே நினைக்கிறேன் .

பாவங்க தாமரை , இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டிடலாம் . ;-)

எப்படிப் பார்த்தாலும் காதல் ஒன்று தானே .அதனால காதல் கவிதைகள் எல்லாமுமே ஒன்று தான் .

December 13th, 2008 at 7:59 am
 17 

“புன்னகையோ போகன்வில்லா” என்று தான் வருகிறது, முழு பாடலின் வரியையும் பார்க்க http://kavingerthamarai.blogspot.com/2009/02/blog-post.html

March 6th, 2009 at 8:16 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment