Archive for October, 2008

 

 

கடந்து மறைகின்ற திருப்பங்களில் எல்லாம்

பிம்பங்களை உதிர்த்த வண்ணம்

என் விரல் பிடித்து வந்துகொண்டிருக்கின்றன

கனவுகள் 

 

 

கையிலிருக்கும் பொம்மைகளை எல்லாம்

தூக்கி  எறிந்து விட்டு

கடைவாயில் எச்சிலொழுக சிரிக்கும்

குழந்தை போல

ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கும்

பிம்பங்களை எல்லாம்

உதறி எறிந்து விட்டு சிரிக்கின்றன கனவுகள்

Read the rest of this entry »

Tags:

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

நாடு நகரங்கள் தாண்டி

காடுகள்  புகுந்து மீண்டு

சில  மலைகளைத் துளையிட்டு

வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன

வழியனுப்பிகளின் முகங்களையும்

கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்

நாம் ஏறிய  ரயில் நிலையங்களின்

நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும் 

நாம் இறங்கிய  பின்னர்

நம்முள்ளும் ….

Tags:

மழையில் நனைவதாய்

நெடுநேர பிரமை …

என் நீண்ட பாதை முழுவதும்

நிலவும் விண்மீன்களும்

கதை பேசியபடி வந்தும்

காற்றின் வெம்மை

மழையின் ஸ்பரிசத்திற்கு

மறுப்பு தெரிவித்தும்

Read the rest of this entry »

Tags:

இரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்

ரகசியங்களின் நிழல்களை

உற்றுப்பார்த்துக்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன

விண்மீன்கள் …

எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்

எலிகள் வரக்கூடுமென

புகைபோக்கியின் துளைகளும் கூட

அடைக்கப்பட்ட பின்னும்

கூரைகளைத் துளைத்து

எட்டிப் பார்க்கின்றன அவைகள்

Read the rest of this entry »

Tags:

கொஞ்ச நாட்களாய் ஏனோ

என் கன்னங்களில்

சிவப்பு பூசிக் கொண்டே தான் எழுகிறது

காலைப் பொழுதுகள் …

————————————————–

நாட்காட்டியில்

தினம் நூறுமுறை

யாரும் பார்த்திடாவண்ணம்

தேதி பார்த்திடும் போது

அச்சமும் கூச்சமும் பின்னிக் கொள்கின்றன

ஒரே அலைவரிசையில் என்னை …

————————————————–

நம் திருமண இரவன்று

உனக்குப் பரிசாகத் தருவதற்காக

வைத்திருக்கிறேன்

ஒரு கோடி ஆசைகள் ….

————————————————–

என் ஒவ்வொரு நொடிகளும்

உதடுகள் துடிப்பது

அதை உச்சரிக்கும் வேளை

எண்ணித்தான் ….

————————————————–

கேட்கிறாயா இப்பொழுதே …

————————————————–

நம் படுக்கை முழுவதும்

பொம்மைகள் வைத்து

விளையாடிட வேண்டும்

சில சமயம் நீ விளையாடிட

பொம்மையாகிட வேண்டும்

நானே ….

————————————————–

கிளி ஒன்று வளர்த்து

“சீய் போடா ” என மரியாதை இல்லாமல்

அழைக்கச் சொல்லித்தர வேண்டும்

நீ வேலைக்குச் சென்று விட்ட

வெறும் பகல் நேரத்தில் …

————————————————–

திடீர் அணைப்புகள்

தினம் தேவை

திருட்டு முத்தங்கள்

தினம் ஒரு முறையாவது …

Read the rest of this entry »

Tags:

 

 நன்றி : யூத் புல்.விகடன்.காம் 

 எல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .

 

ஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..

 

“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”

 

” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .

 

” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”

 

வழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .

 

ஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .

Read the rest of this entry »

Tags: ,

வெகு காலத்திற்கு முன்பு

காலமும் நானும் கூட

கணக்கு வைக்க மறந்துபோன

ஏதேதோ நாட்களில் தொலைந்து போன

என்னிழல்கள்

கூடியிருந்தன ஒன்றாய் …

அத்தனை நிழல்களும் ஆடையில்லாமல்

உண்மையின் நிர்வாணத்துடன்

இன்று மட்டும் உண்மை மட்டும்

உறுதியாய் இருந்தன அத்தனையும் …

இதுகாறும்

மௌனங்கள் மட்டுமே மந்திரமாய்

முணுமுணுத்துக் கொண்டிருந்த

அவைகளின் உதடுகள்

இத்தனை நாட்களுக்கும் சேர்த்து

தொலைந்த கதை பேசத்துவங்கின ..

Read the rest of this entry »

Tags:

 

நன்றி : யூத் புல்.விகடன்.காம்

 

                       பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம்  தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .

 

  தினமும் காலை எழுந்ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்

 கேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும்  வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …

 

  அவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .

 

 “என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா !”

 

இந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .

Read the rest of this entry »

Tags: ,

“அபூ ….அபூ ..ர்ர்ர் … வ ..வா … வேணாம் .. கிட்ட வராத .. என்னை ஒன்னும் பண்ணிடாத … ” வாய் குழறியது . பின்னாலேயே நகர்ந்து  சென்றேன் .சுவர் இடித்தது ..   கீழே இறங்கினாள் . கொடியில் கிடந்த துண்டை எடுத்து  சுற்றிக் கொண்டாள் . நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன் .  கீழே கிடந்த கத்தியை எடுத்தாள் . நிதானமாக என்னை நோக்கி நடந்து வந்தாள் .

 

“ப்ளீஸ் .. வேணாம் .. என்ன விட்டிடு ” கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை .. இடது கையை ஊன்றி சுவற்றில் சாய்ந்து எழுந்தேன் . கை நரம்பு வலித்தது . மீண்டும் கீழே விழுந்தேன் .கத்தியை இரண்டு கைகளாலும் பிடித்து என்னை நோக்கி உயர்த்தினாள்.

 

“இப்போ என்ன … என்னை கத்தியால குத்தனுமா ? இந்தாங்க .. குத்துங்க ..” என்னை நோக்கி நீட்டினாள் .

 

“இல்ல .. வேணாம் .. தப்பு .. பண்ணிட்டே .. ன் ..”  வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது .

 

“சரி நானே குத்திக்கறேன் ” உயர்த்திய கைகளை தன் மார்பை நோக்கிச் செலுத்தினாள். வெள்ளை ரத்தம் பீச்சிட்டுக் கொண்டு என்  முகத்தின் மேல் அடித்தது . சிரித்தாள் .. மிக சப்தமாக . வாஷ் பேசின் குழாயைத் திறந்து பொறுமையாக கத்தியைக் கழுவத்  தொடங்கினாள்.   என் நரம்புகள் இழுத்துக் கொண்டன . மொத்தமாக நினைவிழப்பதற்கு முன் கடைசியாக உதடுகள்

 பிரிந்தன .

 

“சா .. சாதனா .. நீ எங்கே ???”

Read the rest of this entry »

Tags: ,

 

பாவ னா

பார்க் காதே

பாவம் நான் (அடடே !)

 

 

நீலமும்

மஞ்சளும்

நிறங்களாகின்றன

விற்கிறேன் பீச்சில்

பஞ்சுமிட்டாய்  ..!

 

 

 

 

 

உலகத்திலே

பயங்கரமான ஆயுதம்

துப்பட்டா  !!!   (நம்பாட்டி பாருங்க காதலில் விழுந்தேன்)

 

 

 

 

 

 

காற்றுக்கு வலிக்கும்

கதவை சாத்து

எனக்கு  வலித்தால்

காற்றுக்கு சாத்து (ஆஹா !! பேஷ் பேஷ் !!)

 

 

 

 

 

 

 

 

மழை வருகையில்

வராது வானில் விண்மீன்

மழை வழிய

வா வெளியே (நெஜமாவே வேளச்சேரில வெள்ளம்ங்க )

 

 

டிஸ்கி :

 

            என்னங்க பண்ண .. இது வரைக்கும் சீரியஸ் ஆ இருபது குறுங்கவிதைகள் மூணு நெடுங்கவிதைகள் , ஆறு கதைகள்னு பதிவு பண்ணியாச்சு .. ம்ம்ஹ்ம்ம்ம் ..நான் தான் நெறைய தடவ படிச்சிருப்பேன் போல ..அதான் இந்த மொக்க கவிதைகள் .. ஒரே பீலிங்க்ஸ் ஆ இருக்குங்க (அடேய் இதுவும் மொக்கை இல்ல )

Tags: ,