26
Sep

காரணி

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

பெருந்தாகங் கொண்ட

வருணனைக் கொவ்வாத 

விலங்கொன்று

எச்சில் சொட்டச் சொட்ட

எதிர்ப்பட்டிருக்கலாம் தெருமுனையில்

 

பேரழகி ஒருத்தி

மேனியிலே படர

இதழ் சூட்டில் வெந்து

இமை திறக்கும் போது

மார்பின் மேல் அமர்ந்திருப்பவளின்

பற்கள் மட்டும் நீண்டிருக்கலாம்

 

வெகு நேரம் காத்திருந்து

பேருந்தின் ஓய்வு இடைவெளியில்

ஒரு ரூபாய் தேடிச் சலித்து

மீதம் பற்றிய கவலையன்றி

தாளொன்றை வீசியெறிந்து

விரைந்தோடும் கழிப்பறையில்

எதிர்படும் அறைமொத்தமும்

ஆள் உண்டு மூடியிருக்க

கடைசி ஒன்று மட்டும்

கதவின்றிக் காத்திருக்கலாம்

 

கதவு திறந்து அப்பாவே 

விரல் பிடித்துக் கூட்டிச் சென்று

கால்ச் சராய் நீக்கி

‘போ’ என்று சொன்னதாய்

நினைவும் இருக்கலாம்

 

இருக்கவே செய்கின்றது

சொல்லமுடியா

சுவாரசிய காரணங்கள்

தூக்கத்தில் படுக்கை

நனைந்திருத்தலுக்கு …

 

 

 

Tags:

This entry was posted on Friday, September 26th, 2008 at 2:21 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments so far

 1 

வாவ்.. :) nice man.. எங்கெங்கோ கலைந்து போயிருந்த பால்ய நினைவுகளை மீட்டெடுக்கிறது இக்கவிதை.. குழந்தைத்தனம் மாறாத சில்மிஷ வரிகளும், கடைசி வரை இட்டுச்செல்லும் அந்த சுவாரஸ்யமும் அருமை.. ரொம்ப different ஆ இருக்கு இந்த பாடுபொருள்.. ஒவ்வொருவரும் நிச்சயம் கடந்து வந்திருக்கும் பாதை இது.. எனக்கும் என்னன்மோ கனவெல்லாம் ஞாபகம் வருது.. இப்போ சொல்றேன்னு சொன்னா, நீ அடிக்கவே வந்துடுவ.. :D

September 26th, 2008 at 2:34 pm
Rejovasan
 2 

எத்தன தடவை அடி வாங்கிருப்போம் நாங்க எல்லாம் …;-)

கனவு கேக்கறதுக்கு யாருக்காவது கஷ்டமா இருக்குமா ?? அதுவும் உன்கிட்ட இருந்து ….

பல கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கனவுதான் நதிமூலம் . நினைவுக்கு வராத , முடிவு தெரியும் முன்னமே கலைந்து போன கனவு மாதிரி சுவாரசியமான ஒன்னு இருக்கா என்ன ???

September 26th, 2008 at 4:17 pm
அ.கவிக்குயில்
 3 

அனிச்சை நிகழ்வுகளின் அவசரக் காரணிகள் அருமை.:)

September 26th, 2008 at 6:13 pm
sathya
 4 

nalla iruku. etho padicha piragu again oru chinna vayasu paruvatha etti partha makizhchi enaku.nice poem seeni. sorry na tamil la than type pannanum irunthen.mudiyala.neram pathala.release iruku.but irunthalum,intha kavithaiya padichathula siru thugalai en mugathil punnagai mazharthadu avlo tensionlaium.thank you seeni :) keep on writing good poems like this.

September 26th, 2008 at 6:37 pm
Rejovasan
 5 

Scene ?? :-)

September 26th, 2008 at 7:04 pm
Rejovasan
 6 

நன்றி கவி :-)

September 26th, 2008 at 7:04 pm
 7 

கலக்கிட்டீங்க!

October 2nd, 2008 at 9:45 pm
Rejovasan
 8 

நன்றி ஞானசேகர் :-)

October 3rd, 2008 at 12:13 pm
Kalai
 9 

Wow Seeni,
too gud..:)
didn expect such a poem, ve never read kinda dis poem also before..
Keep up d gud wrk goin..:)
peter laam illa, nera patrakkurayin kaaranamaaga, thaai mozhiyai viduththu anniya baashshaiyaai irundhu tharpodhu adhyaavasiya baashaiyaai maari vitta aangilaththil eludhugiraen vimarsanangalai..:)
over story la???
its ok, adjust maadi..:)

October 7th, 2008 at 2:21 pm
Rejovasan
 10 

இதுக்கு நீ இங்கலிஷ் லயே எழுதிருக்கலாம் .. படிச்சு தாவு தீந்திடுச்சு ..

October 9th, 2008 at 3:55 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment