23
Sep

தக்கன …

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

 

சில நேரங்களில்

நேர்ந்து விடுகின்றன

இவைகள்

நாமறியாமல் இல்லை

விளைவறியாமல்  

 

கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்

உடைகின்றன

துடிக்கின்ற மீன்களுக்கு

தூண்டில்கள் இல்லை  

 

புரண்டெழும் போது

புதைகின்றன சில எறும்புகள்

இறுதிக் கூட்டத்தின் ஓலம்

எட்டுவதில்லை நம்மை  

 

வாசனை பிறக்கின்ற வேளைகளில்

மலர்களில் சில மரிக்கின்றன

  

இறகின் மேன்மை

வியக்கப்பட

கிழிக்கப்படுகின்றன வண்ணத்துப்பூச்சிகள்  

 

தெரிந்தா  செய்தேன்

இதெற்கென்ன செய்ய

எப்படியும் கைவசமிருக்கின்றன 

நம்மிடம் சில காரணங்கள்  

 

கவனித்துக் கொண்டேயிருக்கிறது

காரணங்களை நம்மேல் பிரயோகப்படுத்த

காலம் நம்மை .

Tags:

This entry was posted on Tuesday, September 23rd, 2008 at 9:40 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments so far

அ.கவிக்குயில்
 1 

எல்லோரும் கை விரித்து விட்ட ஒரு நிலை என்றாவது வரும் போது,காலத்தின் மேல் நாம் போட்ட பலிகள் எல்லாம் எதைச்சையாக நினைவுக்கு வரும்.இப்போதும் காரணங்கள் இருக்கும் மற்றவர்கள் கைகளில்.

September 26th, 2008 at 6:30 pm
Kalai
 2 

தக்கன ?????

October 7th, 2008 at 2:35 pm
Rejovasan
 3 

தக்கனன்னா தகுதி உள்ளவைகள்ன்னு அர்த்தம். தகுதி உள்ளவைகள் தப்பி பிழைக்கும் னு நம்ம டார்வின் தாத்தா(யாதும் ஊரே யாவரும் கேளீர் :-) ) டார்வின் சொல்லிருக்காருல்ல .. இங்கிலீஸ்ல “SURVAIVAL OF THE FITTEST” ன்னானாம்

October 9th, 2008 at 3:46 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment