காரணி
பெருந்தாகங் கொண்ட
வருணனைக் கொவ்வாத
விலங்கொன்று
எச்சில் சொட்டச் சொட்ட
எதிர்ப்பட்டிருக்கலாம் தெருமுனையில்
Tags: ஆதலினால் கவிதை ...
ஒரு ஆறு மாசம் ஆகுதுங்க ..இந்த ப்ளோக் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சு . எங்கயோ ஆரம்பிச்சு , அங்க இங்க link பிடிச்சு ஒரு ஏழெட்டு ப்ளோக் தவறாம பாக்கறது வழக்கம் ஆய்டுச்சு . (பேரெல்லாம் சொல்லனும்னு ஆசை தான் .. சொறிஞ்சு விடுறேன்னு நம்மளையும் சொல்லிட்டாங்கைன்னா ). எல்லாரையும் பார்த்து எனக்கும் ஆசை வந்து இந்த பட்டாம்பூச்சி விற்பவனையும் ஆரம்பிச்சாச்சு .தினமும் வரவேண்டியது . எதையாவது update பண்ண வேண்டியது. பத்து நிமிசத்துக்கு ஒருக்கா தொறந்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்களான்னு பாக்க வேண்டியது .(கள்ளிக் காட்டு இதிகாசமா எழுதிட்ட)
Tags: மொக்கை
பெருந்தாகங் கொண்ட
வருணனைக் கொவ்வாத
விலங்கொன்று
எச்சில் சொட்டச் சொட்ட
எதிர்ப்பட்டிருக்கலாம் தெருமுனையில்
Tags: ஆதலினால் கவிதை ...
முன்னறிமுகமில்லாத தெருக்களே
தூண்டிலெனக் குத்தி இழுத்து
கண்களில் பாய்ச்சுகின்றன கவனத்தை
இறந்து போன
ஏதோ ஒரு இரவில்
இங்கு தானா வந்து போனது
அடைக்கப் பட்ட வாகனத்தில்
சென்றாலும்
கருப்பு பூசிய கண்ணாடியை
ஊடுருவிப் பார்க்கின்றன கண்கள்
Tags: ஆதலினால் கவிதை ...
இருள் மேவிய
நேற்றைய நீள் இரவின்
கடிகாரம் காண முடியா
ஒரு தருணத்தில்
திறந்து வைத்த சாரளத்தின் வழி
தப்பியோடிக் கொண்டிருந்தன
என் கவிதைகள்
Tags: ஆதலினால் கவிதை ...
சில நேரங்களில்
நேர்ந்து விடுகின்றன
இவைகள்
நாமறியாமல் இல்லை
விளைவறியாமல்
கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்
உடைகின்றன
துடிக்கின்ற மீன்களுக்கு
தூண்டில்கள் இல்லை
Tags: ஆதலினால் கவிதை
கூடுகட்ட மரங்களற்று
குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்
டிஷ் ஆண்டெனாக்கள் தேடி
நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன
காகங்கள்
கதை சொல்ல யாருமின்றி
உருக்குலைந்து திண்ணைகளோரம்
மூப்பேறிய குறு உரல்களில்
பாக்குடன் சேர்த்து
பழசையும் இடித்தபடி
வானம் பார்த்துக் கிடக்கின்றனர்
கதை சொல்லிப் பாட்டிகள்
Tags: ஆதலினால் கவிதை ...
தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….
Tags: கதை நேரம்
தற்சமயம் நகரவாசியாகிவிட்ட
கிராமத்துத் தந்தை தன்
பிறவி நகரக் குழந்தையுடன்
புதிதாய் வாங்கிய அடுக்கு மாடி வீட்டில்
புதுமானைப் புகுவிழா கொண்டாடிய
மூன்றாம் நாள் ..
இறக்குமதி வாசனைத் திரவியம்
ஊரே மணக்கும்
கர்வமாய்ச் சொன்னார்
கிராமத்துத் தந்தை
ஜன்னல் திறந்து வைத்தால்
வருமா வண்ணத்துப் பூச்சிகள்
கேட்கிறது
நகரத்துக் குழந்தை .
Tags: ஆதலினால் கவிதை ...
தொடர்ந்து ஒடவேண்டியிருக்கும்
நேரங்களிலும் கூட
வேகமாக ஓடியும்
நிலையங்கள் காண்கையில்
நிதானித்து நின்று போகும்
புகை வண்டியினைப் போல்
உன் நினைவுகள் நிறுத்துகையில்
உருக்கும் வெயிலிலும்
கைக்குட்டையில் வியர்வையினை
மடித்து வைத்துக் கொண்டு
புன்னகைத்துக் கடக்கிறேன்
உன் நினைவுகளை அல்ல …
Tags: ஆதலினால் கவிதை ...
புன்னகைகள் மலர வேண்டும்
வெகு இயல்பாய்
பறவைகள் பாடித் திரியும்
வழியின்போக்கன் பார்வை திருடும்
பெயர் தெரியாத
ஒரு பூவைப் போல …
செடி போலத் தோன்றினாலும்
பால் ஊற்றி வேண்டினாலும்
என்றும் பூப்பதில்லை
தொட்டியில் புதைக்கப்பட்ட
குரோட்டன் செடிகள் ..
Tags: ஆதலினால் கவிதை ...